சினிமா
“ஒடுக்குமுறை இருக்கும் வரை போராட்டம் இருக்கும்” - வைரமுத்து
“ஒடுக்குமுறை இருக்கும் வரை போராட்டம் இருக்கும்” - வைரமுத்து
குடியுரிமை சட்டத் திருத்தம் இந்தியாவின் அடிப்படையை பொடிப் பொடியாக்கி இருப்பதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள லயோலா கல்லூரியில் அறிஞர் அறவாணன் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய வைரமுத்து, “இந்தியாவின் அடிப்படையை குடியுரிமை சட்டத் திருத்தம் பொடிப் பொடியாக்கி இருக்கிறது. அறிவுலகினர் அனைவரின் கருத்தும் இதுவே.மத்திய அரசு இச்சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறேன்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஒடுக்குமுறைகள் இருக்கும் வரை போராட்டம் இருக்கும். சிலர் போராட்டம் என்றும், சிலர் வன்முறை என்றும் பேசுகிறார்கள். நான் யாரையும் குறிப்பிட்டு சொல்ல விரும்பவில்லை” என தெரிவித்தார்.