\
டைட்டிலில் பட்டம் போடச் சொன்னேனா? ஜி.வி.பிரகாஷ் மறுப்பு!

டைட்டிலில் பட்டம் போடச் சொன்னேனா? ஜி.வி.பிரகாஷ் மறுப்பு!

டைட்டிலில் பட்டம் போடச் சொன்னேனா? ஜி.வி.பிரகாஷ் மறுப்பு!
Published on

படத்தின் டைட்டிலில், ’சின்ன இளைய தளபதி ஜி.வி.பிரகாஷ்குமார்’ என்று வர இருப்பதாக வெளியான தகவலை நடிகரும் இசை அமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் மறுத்துள்ளார். 

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இப்போது நடிப்பிலும் பிசி. இவர் நடித்து அடுத்து, செம, அடங்காதே, 4ஜி, ஐங்கரன், நாச்சியார், குப்பத்துராஜா, 100% காதல் ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. இந்தப் படங்களின் டைட்டிலில் தனது பெயருக்கு முன் ’சின்ன இளைய தளபதி’ என்று ஜி.வி.பிரகாஷ் குமார் போடச் சொல்லியிருப்பதாகவும் அந்தப் படங்களின் டைட்டிலில் ஜி.வி.பி. பெயர், இனி அப்படித்தான் இடம்பெறும் என்றும் செய்திகள் வெளியானது. இதை ஜி.வி.பிரகாஷ் மறுத்துள்ளார். 
‘இது தேவையில்லாத செய்தி. தயவு செய்து இந்த பொய் பிரசாரத்தைச் செய்யாதீர்கள். நடிகர் விஜய் சார் எனக்கு சகோதரர். நான் அவர் ரசிகன். அவ்வளவுதான். அதைத்தாண்டி இப்படி பொய்ப் பிரசாரம் செய்வதால் அவர்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்று தெரியவில்லை. இது போன்ற செய்திகளால் எரிச்சல்தான் வருகிறது’ என்று கூறியுள்ளார், ஜி.வி.பிரகாஷ்குமார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com