\
“தயவு செய்து தியேட்டரில் படத்தின் காட்சிகளை செல்போனில் பதிவு செய்யாதீர்கள்”-வெங்கட் பிரபு

“தயவு செய்து தியேட்டரில் படத்தின் காட்சிகளை செல்போனில் பதிவு செய்யாதீர்கள்”-வெங்கட் பிரபு

“தயவு செய்து தியேட்டரில் படத்தின் காட்சிகளை செல்போனில் பதிவு செய்யாதீர்கள்”-வெங்கட் பிரபு
Published on: 

நடிகர்கள் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன் உட்பட பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ‘மாநாடு’. இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். கடந்த வியாழன் (25.11.2021) அன்று இந்த திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்த நிலையில், மாநாடு திரைப்படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, படத்தை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

“மாநாடு திரைப்படத்தின் மீது நீங்கள் அனைவரும் வெளிப்படுத்தி வரும் அதீத அன்புக்கு நன்றி. இந்த திரைப்படத்தின் காட்சிகளை செல்போனில் படம் பிடித்து, அதனை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இது குற்றம். அனைவரும் இந்த படத்தை திரையரங்குகளில் காணட்டும்” என தெரிவித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com