பிங்க் திரைப்படம் தமிழில் ரீமேக் ஆவது உண்மைதான் ! உறுதி செய்த தயாரிப்பாளர்

பிங்க் திரைப்படம் தமிழில் ரீமேக் ஆவது உண்மைதான் ! உறுதி செய்த தயாரிப்பாளர்

பிங்க் திரைப்படம் தமிழில் ரீமேக் ஆவது உண்மைதான் ! உறுதி செய்த தயாரிப்பாளர்
Published on

பிங்க் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ள தகவல் உண்மைதான் என்று கோவா திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது

விஸ்வாசம் திரைப்படத்துக்கு பிறகு வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அது ஹிந்தி படமான பிங்க் திரைப்படத்தின் ரீமேக் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதுரங்கவேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கியவர் ஹெச்.வினோத். இவர் இயக்கிய இரண்டு படங்களுமே கதை ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை அடைந்தன. நல்ல இயக்குநர் என்ற பெயரையும் அவர் குறுகிய காலத்தில் எட்டியிருக்கிறார். இந்நிலையில் இவர் அஜித்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. விஸ்வாசம் திரைப்படத்துக்கு அடுத்தப்படமாக வினோத்தின் திரைப்படம் அமையும் என்றும் கூறப்பட்டது. ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் திரைப்படத்தின் ரிமேக்காக இது இருக்குமென்றும், இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளதாகவும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகின. ஆனால் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து எந்த தகவலும் வெளிவரவில்லை.

இந்நிலையில் ஹிந்தி பிங்க் திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஷிஜித் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். கோவா திரைப்பட விழாவில் பேசிய அவர் பிங்க் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ள தகவல் உண்மைதான். படம் தயாரான பிறகு அதை என்னிடம் காண்பிப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் அஜித்தின் அடுத்த படம் பிங்க் ரீமேக் என்பது உறுதியாகியுள்ளது.

தமிழில் ரீமேக் செய்தாலும் ஹிந்தி படத்தின் காட்சிக்கு காட்சி ரீமேக் செய்யப்படாது என்றும், தமிழுக்கும் அஜித்துக்கும் ஏற்ற காட்சிகளை வைத்தே படம் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. 2019ன் இரண்டாம் பாதியில் படப்பிடிப்பு தொடங்கப்படலாம் என்றும், படத்தின் இசைக்கு ஏ.ஆர்.ரகுமானிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com