நடிகை பியாவின் மொட்டைத் தலை புதிய கெட் அப்

நடிகை பியாவின் மொட்டைத் தலை புதிய கெட் அப்
நடிகை பியாவின் மொட்டைத் தலை புதிய கெட் அப்

நடிகை பியா மொட்டைத் தலையுடன் நடித்துள்ள புதிய படத்தின் கெட் அப் வெளியாகியுள்ளது.

‘கோ’ படத்தின் மூலம் அதிகம் அறியப்பட்டவர் நடிகை பியா. அவரது சுருள் சுருளான கேசம்தான் அவரது தனித்துவம். அந்த ஹேர் ஸ்டைலுக்காகவே பல இளைஞரிகளின் மனதை கொள்ளை அடித்தார் பியா. ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் பியா பிசியாக இருந்தாலும் அவருக்கு இன்னும் சொல்லிக் கொள்ளும்படி சரியான படங்கள் அமையவில்லை. அவரது நடிப்புத் திறமையை வெளியிப்படுத்திக் காட்ட அவர் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறார். அதற்கு சரியான தீனியை போட்டுள்ளது ‘அபியும் அனுவும்’ திரைப்படம். 

இதில் அவர் மலையாள நடிகர் டொவினோ தாமஸுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படம் தமிழ், மலையாளம் ஆகிய இருமொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் பியா மொட்டைத் தலையோடு புதிய கெட் அப்பில் நடித்துள்ளார். அவரது இயற்கையான முடி அழகை தள்ளி வைத்துவிட்டு அவர் மொட்டைத் தலையோடு நடிக்க சம்மதித்திருக்கிறார். அதற்கு நடிப்பின் மீதுள்ள தாகம் தான் காரணம். அதற்கான புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது முழுக்க முழுக்க மேக் அப்தான் என்றாலும் அவரது புதிய தோற்றம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி உள்ளது. அமிதாப் ஹிந்தியில் ‘பா’வில் நடித்ததற்கு இணையாக இதை பலர் எடுத்து கூறி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com