’என்னை அறிந்தால்’ 7ஆம் ஆண்டு கொண்டாட்டம்: வெளியான அருண் விஜய்-கவுதம் மேனன் புகைப்படங்கள்!

’என்னை அறிந்தால்’ 7ஆம் ஆண்டு கொண்டாட்டம்: வெளியான அருண் விஜய்-கவுதம் மேனன் புகைப்படங்கள்!
’என்னை அறிந்தால்’ 7ஆம் ஆண்டு கொண்டாட்டம்: வெளியான அருண் விஜய்-கவுதம் மேனன் புகைப்படங்கள்!

நடிகர் அருண் விஜய்யும் இயக்குநர் கவுதம் மேனனும் சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

2015ஆம் ஆண்டு அஜித்குமார் - அனுஷ்கா - த்ரிஷா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவானது ‘என்னை அறிந்தால்’திரைப்படம். இந்தப் படத்தில் அருண் விஜய் ’விக்டர்’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தோன்றி தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

இன்றுடன் இந்தத் திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தனது ஆலோசகரும், விக்டர் கதாபாத்திரத்தின் இயக்குநருமான கவுதம் மேனனை சந்தித்திருக்கிறார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com