பிவி சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடிய தீபிகா படுகோனே

பிவி சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடிய தீபிகா படுகோனே

பிவி சிந்துவுடன் பேட்மிண்டன் விளையாடிய தீபிகா படுகோனே
Published on

பிவி சிந்துவுடன் நடிகை தீபிகா படுகோனே பேட்மிண்டன் விளையாடிய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகளில் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதனைத்தொடர்ந்து அவருக்கு பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோனே கடந்த வாரம் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் விருந்து அளித்தார். இந்நிலையில், பிவி சிந்துவுடன் நடிகை தீபிகா படுகோனே பேட்மிண்டன் விளையாடிய புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளன.
உடற்பயிற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட நடிகை தீபிகா படுகோனே, இப்புகைப்படங்களை வெளியிட்டு, 'பிவி சிந்துவுடன் இணைந்து கலோரிகளை எரித்துக் கொண்டிருக்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com