நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிம்பு ‘காலா’ ரஜினி கெட் அப்பில் கலந்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள திரைப்படம் ‘காலா’. இதன் டீசர் சமீபத்தில்தான் வெளியானது. அதில் கறுப்பு உடையில் ரஜினிகாந்த் வலம் வந்திருப்பார். கூடவே அவர் அதில், ‘வேங்கை மகன் ஒத்தயிலெ நிக்கென் மொத்தமா வாங்கலெ’ என்றும், ‘கியாரே செட்டிங்கா?’ என்று பஞ்ச் வசனம் பேசியிருப்பார். அதை வைத்து பல நெட்டீசன்கள் வகைவகையாக வசனம் எழுதி குவித்தனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரஜினி கறுப்பு உடையில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும் போஸ் பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் ரஜினியின் அதே உடைபாணியில், நடிகர் சிம்பு ஒரு தனியார் டிவி நிகழ்ச்சியில் ஃபைனல் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் ரஜினியின் அதே ஸ்டைலில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து போஸ் கொடுத்தார். அந்தப் படம் ரஜினி ரசிகர்கள் மத்தியிலும், சிம்பு ரசிகர்கள் மத்தியிலும் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது.

