“எனது காட்சிகள் முழுதாக முடிந்தது” - ‘பேட்ட’ ரஜினி மகிழ்ச்சி

“எனது காட்சிகள் முழுதாக முடிந்தது” - ‘பேட்ட’ ரஜினி மகிழ்ச்சி
“எனது காட்சிகள் முழுதாக முடிந்தது” - ‘பேட்ட’ ரஜினி மகிழ்ச்சி

‘பேட்ட’ படத்தின் தனக்கான படப்பிடிப்பு காட்சிகள் முடிந்தது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கார்த்தி சுப்பாராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம்‘பேட்ட’. இப்படத்தில் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, நவாசுதின் சித்திக், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ‘பேட்ட’ படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் கசிந்து அவ்வப்போது வைரலானது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் ரஜினியின் இரு மாதிரியான ஃபர்ஸ்ட் லுக்குகள் வெளியிடப்பட்டன. இது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இந்நிலையில்‘பேட்ட’படத்தின் தனக்கான காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்தது என சமூக வலைத்தளமான ட்விட்டரில் ரஜினி பதிவிட்டுள்ளார். மேலும் 15 நாள் முன்னதாகவே தனது படபிடிப்பு முடித்ததில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகளையும் பதிவு செய்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com