\
விஜய் வழியில் ‘பேட்ட’ ரஜினி ஆடியோ விழா

விஜய் வழியில் ‘பேட்ட’ ரஜினி ஆடியோ விழா

விஜய் வழியில் ‘பேட்ட’ ரஜினி ஆடியோ விழா
Published on

‘சர்கார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற தனியார் கல்லூரியிலேயே ‘பேட்ட’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

நடிகர் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘பேட்ட’. இந்தப் படம் பொங்கல் அன்று திரைக்கு
வரவுள்ளது. இதில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். சசிக்குமார், விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா, நவாஜுதீன்
சித்திக் என நட்சத்திரங்கள் பட்டாளமே இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இதன் படப்பிடிப்பு டேராடூன், டார்ஜிலிங், ஆக்ரா
மற்றும் சென்னையில் நடைபெற்றது. 

ஏற்கனவே ‘பேட்ட’ ரஜினியின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து இன்னொரு புகைப்படமும்
வெளியிடப்பட்டது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படத்தின் ‘மரண மாஸ்’ என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் ‘பேட்ட’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா எப்போது, எங்கு நடைபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடம் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் விஜய் நடித்து வெளியான ‘சர்கார்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. அதே கல்லூரியில்தான் ‘பேட்ட’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவும் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இன்னமும் ‘பேட்ட’ படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் கல்லூரி தரப்பில் இருந்து இசை வெளியீடு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com