‘ஆடை’ படத்திற்கு தடை விதிக்க கோரி மனு 

‘ஆடை’ படத்திற்கு தடை விதிக்க கோரி மனு 

‘ஆடை’ படத்திற்கு தடை விதிக்க கோரி மனு 
Published on

அமலாபாலின் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஆடை’ படத்திற்கு தடை விதிக்க கோரி டிஜிபி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. 

‘மேயாத மான்’ படத்தை இயக்கிய ரத்னகுமார் ‘ஆடை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை அமலாபால் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை வீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. விஜய் கார்த்திக் கண்ணா ஒளிப்பதிவில், பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். 

மேலும் இப்படத்தில் விஜே ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்தப் படம் ஜுலை 19-ம் தேதி திரைக்கு வரும் என்றும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. 

இந்நிலையில், அனைத்து அரசியல் மக்கள் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், சமுதாயத்தை சீரழிக்கும் விதத்தில் ‘ஆடை’ படத்தில் ஆடையின்றி நடித்துள்ளார் அமலாபால் எனவும் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் ‘ஆடை’ போன்ற படங்களை தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com