’ஸ்டார் வார்ஸ்’ நடிகர் பீட்டர் மேஹ்யூ காலமானார்

’ஸ்டார் வார்ஸ்’ நடிகர் பீட்டர் மேஹ்யூ காலமானார்
’ஸ்டார் வார்ஸ்’ நடிகர் பீட்டர் மேஹ்யூ காலமானார்

’ஸ்டார் வார்ஸ்’ படங்களில் செவ்பக்கா கேரக்டரில் நடித்த, பீட்டர் மேஹ்யூ மரணம் அடைந்தார். அவருக்கு வயது 74.

’ஸ்டார் வார்ஸ்’ படங்களில் செவ்பக்காவாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர், ஏழடி உயர பீட்டர் மேஹ்யூ. டெர்ரர், ஸ்டார் டூர்ஸ், யெஸ்டர்டே வாஸ் டை உட்பட சில படங்களில் நடித்துள்ள இவர், அமெரிக்காவின் வடக்கு டெக்சாஸ் பகுதியில் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் இவர் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்துவிட்டதாக, அவர் குடும்பத்தினர் இப்போது தெரிவித்துள்ளனர். அவரின் மரணத் துக்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை. பீட்டரின் மரணம் குறித்து அறிந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 

பீட்டர் மேஹ்யூ, ’சிந்துபாத் அண்ட் தி ஐ ஆப் தி டைகர்’ படத்தில் சிறு கேரக்டரில் நடித்தார். பிறகு 1977 ஆம் ஆண்டு ரிலீஸான ஸ்டார் வார்ஸ் படத்தில் ஹான் சோலோவின் நண்பராகவும், துணை விமானியாகவும் நடித்து பிரபலமானார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com