‘பேரன்பு’ பிப்ரவரியில் ரிலீஸ்

‘பேரன்பு’ பிப்ரவரியில் ரிலீஸ்
‘பேரன்பு’ பிப்ரவரியில் ரிலீஸ்


‘பேரன்பு’ திரைப்படம் 2019 பிப்ரவரியில் ரிலீஸ் ஆகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

மம்மூட்டி, அஞ்சலி, சாதனா, சமுத்திரக்கனி, திருநங்கை அஞ்சலி அமீர், சுராஜ் வெஞ்சரமூடு உட்பட பலர் நடித்துள்ள படம், ‘பேரன்பு’. ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தை ஸ்ரீராஜலட்சுமி பிலிம்ஸ் சார்பில் பி.எல்.தேனப்பன் தயாரித்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

தமிழ், மலையாளத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கார் ஓட்டுனராக மம்மூட்டி நடித்துள்ளார். ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில் தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்கு முன், திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. டீசரும் பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ரிலீஸ் எப்போது என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் ‘பேரன்பு’ திரைப்படம் 2019 பிப்ரவரியில் ரிலீஸ் ஆகுமென படக்குழு தெரிவித்துள்ளது.

இத்திரைப்படம் 47-வது சர்வதேச ராட்டர்டேம் (நெதர்லாந்து) திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 187 உலக திரைப்படங்கள் போட்டியிட்ட இங்கு, பார்வையாளர்கள் விருதுக்கான பிரிவில் முதல் 20 திரைப்படங்களில் இடம்பெற்ற ஒரே இந்தியத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com