சினிமா டிக்கெட் குறைப்புக்கு அரசுக்கு நன்றி - ஃபெப்சி அமைப்பு

சினிமா டிக்கெட் குறைப்புக்கு அரசுக்கு நன்றி - ஃபெப்சி அமைப்பு

சினிமா டிக்கெட் குறைப்புக்கு அரசுக்கு நன்றி - ஃபெப்சி அமைப்பு
Published on

சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதற்கு ஃபெப்சி அமைப்பு அரசுக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் நன்றி தெரிவித்துள்ளது.

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் இன்று காலை டெல்லி விக்யான் பவனில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில், கவுன்சில் உறுப்பினர்களாக உள்ள மாநில நிதி அமைச்சர்கள் கலந்து கொண்டு தங்கள் மாநிலம் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவித்தனர். தமிழக அரசின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இன்று நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 33 பொருட்கள் மீதான வரியை குறைக்க முடிவு எடுக்கப்பட்டது. 100 ரூபாய்க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 28 %ல் இருந்து 18%ஆக குறைக்கப்பட்டுள்ளது. 100 ரூபாய்க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 18%ல் இருந்து 12%ஆக குறைக்கப்பட்டுள்ளது. தமிழகம் சம்பந்தப்பட்ட 23 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. இதில் 28% உள்ள பொருட்கள் 12% ஆகவும் சில பொருட்கள் 5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது”என்று கூறினார்.

இந்நிலையில், சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதற்கு ஃபெப்சி அமைப்பு அரசுக்கும் அமைச்சர் ஜெயக்குமாருக்கும் நன்றி தெரிவித்துள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com