சினிமா
சோறே சாப்பிடக்கூடாது.. . பவர்ஸ்டாருக்கு உத்தரவு
சோறே சாப்பிடக்கூடாது.. . பவர்ஸ்டாருக்கு உத்தரவு
தெலுங்கு தேசத்தின் பவர்ஸ்டார் பவன் கல்யாண். 46 வயதை பூர்த்தி செய்துவிட்ட இவர் உடல் எடை சற்று அதிகமாகி வருவதால் அவதிப்பட்டு வருகிறார். காரணம் அரிசி சாதம்.
அரிசிசாதத்தை விரும்பி உண்ணும் பவன் கல்யாணின் உடல் பெறுத்து முகம் தளர்ந்து விட்டதாம். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான ’சர்தார் கப்பார் சிங்’, ’கட்டமராயுடு’ ஆகிய படங்களில் அவரது உருவம் வேறுபட்டிருந்தது. இந்நிலையில் அவர், ஸ்டைலிஸ் இயக்குநர் டிரிவிக்ரம் படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். ’அத்தாரின்டிகி தாரிடி' என்ற அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை அரிசி சாதம் சாப்பிடுவதை தவிருங்கள். பிட்டாக இருக்க வேண்டும் என ஸ்ட்ரிட்டாக சொல்லி விட்டாராம் இயக்குநர். இதனால், அரிசி சாத உணவுகளை தவிர்த்து விட்டாராம் பவர்ஸ்டார்.