\
அதிரடி, ஆக்‌ஷன்: பட்டையைக் கிளப்பும் ‘பட்டாஸ்’ ட்ரெய்லர்!

அதிரடி, ஆக்‌ஷன்: பட்டையைக் கிளப்பும் ‘பட்டாஸ்’ ட்ரெய்லர்!

அதிரடி, ஆக்‌ஷன்: பட்டையைக் கிளப்பும் ‘பட்டாஸ்’ ட்ரெய்லர்!
Published on

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பட்டாஸ்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது

தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள திரைப்படம் ‘பட்டாஸ்’. சத்யஜோதி பிலிம்ஸ் இயக்கியுள்ள இத்திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ஏற்கெனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ட்ரைலர் இன்று காலை வெளியானது. கிராமம் சார்ந்த படமான பட்டாஸில் தனுஷ், தந்தை, மகன் இரு வேடங்களில் நடித்துள்ளார். தந்தை தனுஷுக்கு ஜோடியாக சினேகா நடித்துள்ளார்.

தற்பாதுகாப்பு கலையில் சிறந்து விளங்கும் தனுஷ், அவரை எதிர்க்கும் வில்லன், தந்தையின் கலையை கையில் எடுத்தே வில்லனை பழிவாங்கி கலையை காப்பாற்றும் மகன் தனுஷ் என்பதுபோல ட்ரைலர் தெரிந்தாலும் நகைச்சுவை, காதல், செண்டிமெண்ட் என பக்கா கமர்ஷியல் படமாக பட்டாஸ் இருக்கும் என்றே தெரிகிறது.

user

இன்று வெளியான ட்ரைலரை தனுஷ் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர். #PattasTrailer என்ற ஹேஸ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. வரும் 9ம் தேதி ரஜினியின் தர்பார் வெளியாகவுள்ள நிலையில் போட்டியாக தனுஷின் திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com