சிம்பு பிறந்தநாள்: ‘பத்து தல’, ‘வெந்து தணிந்தது காடு’ சிறப்பு போஸ்டர் வெளியீடு

சிம்பு பிறந்தநாள்: ‘பத்து தல’, ‘வெந்து தணிந்தது காடு’ சிறப்பு போஸ்டர் வெளியீடு
சிம்பு பிறந்தநாள்: ‘பத்து தல’, ‘வெந்து தணிந்தது காடு’ சிறப்பு போஸ்டர் வெளியீடு

நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்து வரும் ‘பத்து தல’ படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.

நடிகரும், இயக்குநருமான டி. ராஜேந்தரின் மகனான சிம்பு, தந்தையை போலவே நடிப்பு, இயக்கம் என பல திறமைகளை கொண்டவர். சிறுவயது முதல் நடித்து வரும் சிம்பு, தற்போது 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

பல வருடங்களாக வெற்றி படங்கள் அமையாமல் இருந்தநிலையில், சமீபத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், நடிகர் சிம்புவின் பிறந்தநாளான இன்று, அவருக்கு வாழ்த்துக்ளை தெரிவித்துள்ள ‘பத்து தல’ படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும், ‘பத்து தல’ படத்தில் சிம்பு வரும் காட்சிகளை கிளிம்ப்ஸ் வீடியோவாக படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் சிம்பு ஏஜிஆர் (AGR) என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். 'சில்லுனு ஒரு காதல்' இயக்குனர் ஒபலி என். கிருஷ்ணா இயக்குகிறார். இந்த படத்தில் சிம்புவுடன் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி உள்ள அப்டேட்டுகள், அவரின் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ படங்களுக்குப் பிறகு கௌதம் மேனனின் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் 3-வது முறையாக சிம்பு கூட்டணி சேர்ந்துள்ள படம் ‘வெந்து தணிந்தது காடு’. இந்தப் படத்தின் சிறப்பு போஸ்டரை, சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com