\
"அவரின் சிந்தனைகள் ஈடு செய்ய முடியாதது" கமல்ஹாசன் குறித்து பார்வதி நாயர் !

"அவரின் சிந்தனைகள் ஈடு செய்ய முடியாதது" கமல்ஹாசன் குறித்து பார்வதி நாயர் !

"அவரின் சிந்தனைகள் ஈடு செய்ய முடியாதது" கமல்ஹாசன் குறித்து பார்வதி நாயர் !
Published on

கமல்ஹாசனின் சிந்தனைகள் ஈடு செய்ய முடியாதது என்று நடிகை பார்வதி நாயர் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 61 ஆண்டுகள் ஆனதையடுத்து சமூக வலைத்தளங்களில் #61yearsofkamalism என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து மோஷன் போஸ்டர்கள், கமலின் பழையப் பாடல்களை மறு உருவாக்கம் செய்வது என சமூக வலைத்தளம் களைக்கட்டி வருகிறது. கமலுடன் நடித்த அனுபவம் குறித்து நடிகை பார்வதி நாயரும் தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்துள்ளார்.

நடிகை பார்வதி நாயரர் கமலஹாசனின் "உத்தமவில்லன்" படத்தில் இணைந்து நடித்துள்ளார். இது குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள பார்வதி நாயர் "அவரின் தொலைநோக்கு பார்வைகள் அபாரமானவை, அவரின் சிந்தனைகள் ஈடு செய்ய முடியாதவரை. அவை அனைத்தும் மிகப் பிரமாதமாக இருக்கும். அவருடன் பணியாற்றுது மிகப்பெரிய அனுவபவமாக இருந்தது" என குறிப்பிட்டு உத்தமவில்லன் படத்தின் காட்சியை பகிர்ந்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com