திராவகம் வீசப்பட்ட பெண்ணாக நடிக்கிறார் பார்வதி!
தமிழில், பூ, மரியான், உத்தமவில்லன் உட்பட சில படங்களில் நடித்தவர் மலையாள நடிகை பார்வதி. கன்னடப் படங்களிலும் நடித்துள்ள இவர், இப்போது மலையாள படம் ஒன்றில் திராவகம் வீசப்பட்ட பெண்ணாக நடிக்கிறார்.
மனு அசோகன் இயக்கும் இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், ஆசிப் அலி, பிரதாப் போத்தன், அனார்க்கலி மரிகார் உட்பட பலர் நடிக்கின்றனர். கதையை சஞ்சய்-பாபி எழுதியுள்ளனர்.
சஞ்சய் கூறும்போது, ’இது உண்மை கதையில்லை. ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையை நாங்கள் சித்தரித்திருக் கிறோம். படத்துக்காக பார்வதிக்கு சிறப்பு மேக்கப் அளிக்கப்படுகிறது. இதற்காக ஆசிட் தாக்குதலால் பாதிப்புக்குள்ளான பலரை தொடர்புகொண் டு கதையை உருவாக்கி இருக்கிறோம். நவம்பர் 10 ஆம் தேதி படப்பிடிப்பு தொடங்குகிறது. கோபி சுந்தர் இசை அமைக்கிறார்’ என்றார்.
திராவக வீச்சில் பாதிக்கப்பட்ட டெல்லியை சேர்ந்த லட்சுமி அகர்வால் என்ற பெண்ணின் கதையில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க உள்ள நிலையில், நடிகை பார்வதியும் ஆசிட் வீசப்பட்ட பெண்ணின் கேரக்டரில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.