’குண்டர்கள் மன்றமாகும் ரசிகர் மன்றம்’: நடிகை பார்வதி பாய்ச்சல்!

’குண்டர்கள் மன்றமாகும் ரசிகர் மன்றம்’: நடிகை பார்வதி பாய்ச்சல்!
’குண்டர்கள் மன்றமாகும் ரசிகர் மன்றம்’: நடிகை பார்வதி பாய்ச்சல்!

மலையாள நடிகர் சங்கமான அம்மா’வுக்கு எதிராக குரல் கொடுப்பதால் பல வாய்ப்புகளை இழந்துள்ளதாக நடிகை பார்வதி தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பிரபல நடிகை ஒருவர் 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப் பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மலையாள நடிகர் சங்கமான ’அம்மா’வில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இந் நிலையில் ’அம்மா’வின் தலைவராக இருந்த இன்னசென்ட் பதவியில் இருந்து விலகியதை அடுத்து மோகன்லால் தலைவர் ஆனார். அவர் பதவியேற்றதும் திலீப்பை சங்கத்தில் மீண்டும் சேர்த்தனர்.

இந்த முடிவுக்கு ரேவதி, பார்வதி, பத்மப்பிரியா, ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட திரைப்பட பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த நடிகைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் ஆகியோர் நடிகர் சங்கத்தில் இருந்தும் விலகினர். இதையடுத்து திலீப்பை மீண்டும் சேர்ப்பது பற்றிய தங்கள் முடிவை ’அம்மா’ மாற்றியது. இந்நிலையில் நடிகர் திலீப், ‘நிரபராதி என்று நிரூபித்துவிட்டு சங்கத்தில் இணைகிறேன்’ என்று கூறினார்.

திலீப்பை சங்கத்தில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றியதற்கு விளக்கம் அளிக்கும்படி ரேவதி, பார்வதி, பத்மபிரியா, ரீமா கல்லி ங்கல் ஆகியோர் நடிகர் சங்கத்துக்கு கடிதம் அனுப்பினர். 

இதுகுறித்து ரேவதி கூறும்போது, ‘நடிகர் சங்கத்தில் திலீப் இருக்கிறாரா? இல்லையா? என்பதை சங்கம் தெளிவுபடுத்த வேண் டும் என்று விளக்கம் கேட்டோம். பதில் இல்லை. பாலியல் விவகாரங்களில் ஈடுபடும் சங்க உறுப்பினர்களின் குற்றம் நிரூபிக் கப் பட்டால் அவர்களை நிரந்தரமாக நீக்க சங்க விதியில் திருத்தம் கொண்டு வரும்படி கோரினோம். அதற்கும் பதில் இல்லை’ என்றார்.

இந்நிலையில் ’அம்மா’ உறுப்பினர், நடிகர் சித்திக் கூறும்போது, ‘நடிகர் திலீப், சங்கத்தில் இருந்து விலகுவதாக கடந்த 10 ஆம் தேதி ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டார். தொடர்ந்து நடிகைகள் சிலர், சங்கத்தையும் மோகன்லாலையும் குறி வைத்து தாக்கி வருகிறார்கள். நடிகை பார்வதி, மூத்த நடிகர் மம்மூட்டியை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்டு பிரச்னையை கிளப்புகிறார்’ என்று கூறியிருந்தார். இந்நிலையில், எதிர் குரல் கொடுத்ததால் தங்கள் சினிமா வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக நடிகை பார்வதி கூறியுள்ளார்.

இது பற்றி அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘மலையாள பெண்கள் திரைப்படக் கூட்டமைப்பை ஆரம்பித்த பிறகு பல வாய்ப் புகள் பறிக்கப்பட்டுள்ளன. நானும் என்னோடு உள்ள நடிகைகளும் இதில் பாதிக்கப்பட்டுள்ளோம். எங்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்ப டுகிறது. பேசுவதற்கே பலர் பயப்படுகின்றனர். இந்தி திரையுலகில், மீ டு மூலம் பாலியல் புகார் தெரிவிக்கும் நடிகைகளுக்கு பல தயாரிப்பு நிறுவனங்கள் ஆதரவு தெரிவிக்கின்றன. அவர்களை அந்நிறுவனங்கள் தைரியமாக பேசச் சொல்கின்றன. இதைக் கண்டு எனக்கு பொறாமையாக இருக்கிறது. ஆனால் கேரளாவில் அப்படி இல்லை. இது வருத்தமாக இருக்கிறது.

ஹீரோக்களை கடவுளாகப் பார்க்கும் நிலை இங்கு பயங்கரமாக உள்ளது. அவர்களின் ரசிகர் மன்றங்கள், குண்டர்களின் மன்ற மாக மாறுவது நம்ப முடியாததாக இருக்கிறது. அவர்கள் மூலம் சமூக வலைத்தளங்களில் கடும் தாக்குதலுக்கு உள்ளாகிறோ ம். கொலைமிரட்டல், பாலியல் வன்கொடுமை மிரட்டல்களை சந்திக்கிறோம். இதனால் நாங்களும் எங்கள் குடும்பத்தினரும் பயத்தில் உள்ளோம். எங்கள் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்படும் நிலை கூட ஏற்படலாம்.

கடந்த 4 வருடங்களாக நான் நடித்த பல படங்கள் ஹிட்டாகியுள்ளன. ஆனால் சமீப காலமாக எனக்கு ஒரே ஒரு பட வாய்ப்பு மட்டுமே கிடைத்திருக்கிறது. இது எதனால் என்பது எல்லோருக்கும் தெரியும். எனது தாய் கூட நடிப்பை விட்டுவிட்டு எம்.பி.ஏ படிப்பைத் தொடரச் சொல்கிறார்’ என்று தெரிவித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com