“எனக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை” - நடிகர் சரவணன் விளக்கம்

“எனக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை” - நடிகர் சரவணன் விளக்கம்
“எனக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை” - நடிகர் சரவணன் விளக்கம்

நடிகர் சரவணன் தனக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை என்று நீண்ட நாட்களுக்குப் பிறகு விளக்கம் அளித்துள்ளார்.                     
‘வைதேகி வந்தாச்சு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சரவணன். அதற்கு பிறகு ‘பார்வதி என்னை பாரடி’, ‘பொண்டாட்டி ராஜ்யம்’ உட்பட 25 படங்களுக்கு மேல் நாயகனாக நடித்துள்ளார். ஆனால் ‘பருத்தி வீரன்’ படத்தில் சித்தப்பு என்ற கதாபாத்திரத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்ததன் மூலம் ‘பருத்தி வீரன்’ சரவணன் என பிரபலமானார். 

சமீபத்தில் இவருக்கு பன்றிக் காய்ச்சல் என்று பத்திரிகைகளில் பரவலாக செய்தி வெளியானது. அது குறித்து இப்போது விளக்கம் அளித்துள்ளார் சரவணன். அவர் வெளியிட்டுள்ள அறிகையில், “நான் சேலத்திலிருந்த போது காய்ச்சல் இருந்தது. அங்கு சிகிச்சை எடுத்து விட்டு சென்னை வந்த போதும் காய்ச்சல் குணமாகாததால் இங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.

மூன்று நாட்கள் கழித்து அது சாதாரண காய்ச்சல்தான் என்று வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். வீட்டுக்கு வந்த பின் சில நாட்கள் ஓய்வு எடுத்து வந்தேன். அதன் பின் ஒரு படத்திலும் நடித்து விட்டேன். ஆனால் இன்னமும் பல பேர் எனக்கு பன்றிக் காய்ச்சல்  இருக்கிறது என்று போன் செய்து நலன் விசாரிக்கிறார்கள். அப்படி ஒன்றும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com