\
பிஜி தீவுகளில் வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி'

பிஜி தீவுகளில் வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி'

பிஜி தீவுகளில் வெங்கட் பிரபுவின் 'பார்ட்டி'
Published on

 ’சரோஜா படத்துக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில், அம்மா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம், ’பார்ட்டி’. சத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா, ’கயல்’ சந்திரன், ரம்யா கிருஷ்ணன், நிவேதா பெத்துராஜ், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். முதல் முறையாக பிரேம்ஜி, வெங்கட் பிரபு படத்துக்கு இசை அமைக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா, சென்னையில் நேற்று நடந்தது. இதன் படப்பிடிப்பு பிஜி தீவுகளில் வரும் 20-ம் தேதி முதல் தொடங்குகிறது. ஒரே ஷெட்யூலில் படப்பிடிப்பை நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகப் படக்குழு கூறியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com