\
’ஒத்த செருப்பு’ படத்திற்கு தேசிய விருது; கேக் வெட்டி கொண்டாடிய பார்த்திபனின் மகள், மகன்!

’ஒத்த செருப்பு’ படத்திற்கு தேசிய விருது; கேக் வெட்டி கொண்டாடிய பார்த்திபனின் மகள், மகன்!

’ஒத்த செருப்பு’ படத்திற்கு தேசிய விருது; கேக் வெட்டி கொண்டாடிய பார்த்திபனின் மகள், மகன்!
Published on

பார்த்திபன் இயக்கி நடித்த ‘ஒத்த செருப்பு’ படத்திற்கு தேசிய விருது கிடைத்ததையடுத்து அவரது மகளும் மகனும் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே சென்று கேக் வெட்டி உற்சாகமுடன் கொண்டாடி இருக்கிறார்கள்.

பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான 'ஒத்த செருப்பு' விமர்சன ரீதியில் வரவேற்பை பெற்றது. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதையை அமைத்து நடித்தது மட்டுமல்லாமல், அந்தப் படத்தை அவரே இயக்கியும் தயாரித்தும் இருந்தார்.

பார்த்திபனின் இந்த முயற்சிக்கு பாராட்டுகளூம் விருதுகளும் கிடைத்திருந்த நிலையில் மேலும், பெரிய விருதாக ஸ்பெஷல் ஜூரி பிரிவில் 2019-க்கான தேசிய விருது தற்போது அறிவிக்கப்பட்டது.

அதோடு, இப்படத்தில் பணியாற்றிய ரசூல் பூக்குட்டிக்கும் சிறந்த ஆடியோகிராபிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இதனை கொண்டாடும் விதமாக பார்த்திபனின் அடுத்தப் படமான ‘இரவின் நிழல்’ படப்பிடிப்பிற்கே சென்று அவரது மகள் கீர்த்தனாவும் ராக்கியும் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடியிருக்கிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com