நிச்சயதார்த்த மோதிரத்துக்கு 24 மணி நேர பாதுகாப்பு: பாரிஸ் ஹில்டன் முடிவு

நிச்சயதார்த்த மோதிரத்துக்கு 24 மணி நேர பாதுகாப்பு: பாரிஸ் ஹில்டன் முடிவு

நிச்சயதார்த்த மோதிரத்துக்கு 24 மணி நேர பாதுகாப்பு: பாரிஸ் ஹில்டன் முடிவு
Published on

பிரபல பாடகி பாரிஸ் ஹில்டன் தனது விலையுயர்ந்த நிச்சயதார்த்த மோதிரத்துக்கு, 24 மணி நேர பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

பிரபல பாடகியும் ஹாலிவுட் நடிகையுமான பாரிஸ் ஹில்டன் (36), ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஜில்காவை காதலித்து வந்தார்.  இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். கடந்த வாரம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அதையொட்டி, 2 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வைர மோதிரத்தை பாரிஸ் ஹில்டனுக்கு அணிவித்தார் கிறிஸ். இந்த மோதிரத்தை 24 மணி நேரம் பாதுகாக்க, தனி பாதுகாவலர்களை நியமித்துள்ளார். 

ஹாலிவுட் நடிகைகள் நிக்கி மினாஜ், கிம் கர்டாஷியான் ஆகியோரிடம் சமீபத்தில் கொள்ளை முயற்சி நடந்ததால் இந்த பாதுகாப்பை அவர் ஏற்படுத்தியுள்ளார். ஏற்கனவே ஹில்டனின் வீட்டுக்கு 24 பாதுகாப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com