\
நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உடல்நலக்குறைவால் காலமானார்

நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உடல்நலக்குறைவால் காலமானார்

நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உடல்நலக்குறைவால் காலமானார்
Published on

நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83.

திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்தவர் பரவை முனியம்மா. நாட்டுப்புற பாடகியான இவர், தூள் படத்தின் மூலம் மக்களால் அறியப்பட்டவர். குறிப்பாக அப்படத்தில் வரும் சிங்கம் போல பாடல் மூலம் பிரபலமானவர். அப்படத்திற்கு பின்னும் சில படங்களில் சிறு வேடங்களில் நடித்த அவர், வயது மூப்பு காரணமாக ஓய்வு பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு உள்ளிட்ட உடல் நல பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதி சடங்கு இன்றே நடத்தப்படும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com