“த்ரிஷாவின் நடிப்பு வேற மாதிரி இருக்கும்” - இயக்குநர் நம்பிக்கை
த்ரிஷாவின் ‘பரமபதம் விளையாட்டு’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. ஆகவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகவுள்ளது.
தமிழ் சினிமாவின் இளம் நடிகையாக இன்றும் வலம் வருபவர் த்ரிஷா. இவர் தற்போது நாயகியாக நடிக்கும் படம் ‘பரமபதம் விளையாட்டு’. இப்படத்தை திருஞானம் இயக்குகிறார். த்ரிஷா மருத்துவராகவும், மருத்துவரின் தாயாகவும் நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஏற்காட்டில் உள்ள ராபர்ட் கிளைவ் மேன்சனில் வைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தை பற்றி இயக்குனர் திருஞானம் கூறும் போது, “இந்த மாதிரி கதையில் த்ரிஷா முதன்முதலாக நடிக்கிறார். இதை நான் மிகைப்படுத்தி சொல்லவில்லை; அதான் உண்மை. அவரை வேற மாதிரி பார்க்கலாம். அவர் இந்தப் படத்தில் நடிப்பது தனக்கு சிறப்பாக இருக்கும் என நினைத்தார். இந்தக் கதாபாத்திரத்தை மிகவும் விரும்பினார். படப்பிடிப்பில் கடினமான காட்சிகளில் த்ரிஷா ஒரே டேக்கில் முடித்து கொடுத்தார். படத்தில் நிறைய ட்விஸ்ட் மற்றும் திருப்பங்கள் இருக்கும்.”என்றார்.
படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இம்மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.