” ’பாபநாசம் 2’ கமல் உடனே பண்ணினால்தான் சரியாக இருக்கும். ஆனால்?”: ஸ்ரீப்ரியா

” ’பாபநாசம் 2’ கமல் உடனே பண்ணினால்தான் சரியாக இருக்கும். ஆனால்?”: ஸ்ரீப்ரியா
” ’பாபநாசம் 2’ கமல் உடனே பண்ணினால்தான் சரியாக இருக்கும். ஆனால்?”: ஸ்ரீப்ரியா

'த்ரிஷ்யம்' மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம்’ படத்தை தயாரித்தது போலவே, ’த்ரிஷயம் 2’ தமிழ் ரீமேக்கான ‘பாபநாசம் 2’ படத்தை ஸ்ரீப்ரியா தனது கணவர் ராஜ்குமார் சேதுபதி உடன் இணைந்து தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜின் ’விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக வெற்றிமாறன் படத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில், ’பாபநாசம் 2’ எந்த நிலையில் இருக்கிறது என்று நடிகை ஸ்ரீப்ரியாவிடம் தொடர்பு கொண்டு பேசினோம்

’பாபநாசம் 2’ எந்த நிலையில் இருக்கிறது?

” ‘பாபநாசம் 2’ எடுப்பது குறித்து எந்த எண்ணமும் தற்போது இல்லை. இப்போதுதான் தெலுங்கு ’த்ரிஷ்யம் 2’ ரீமேக் முடிந்துள்ளது. தெலுங்கு ரீமேக்கை நானும், சுரேஷ் புரொடொக்‌ஷனும்தான் இணைந்து தயாரிக்கிறோம். இன்னும் கமல் சாரிடம் ’பாபநாசம் 2’ குறித்து பேசவே இல்லை”.

’பாபநாசம் 2’ எடுக்கின்ற திட்டமாவது இருக்கிறதா?

“கமல் சார் வேறு இரண்டுப் படங்கள் பண்ணவிருக்கிறார். ’பாபநாசம் 2’ உடனே பண்ணினால்தான் சரியாக இருக்கும். கமல் சாருக்கு நேரம் இருக்கிறதா? பண்ணுவாங்களான்னு தெரிஞ்சிக்கிட்டுத்தான், அதுக்கு தகுந்தமாதிரி யோசிப்போம்.

’பாபநாசம் 2’ படத்தில் கெளதமி நடிக்கமாட்டார் என்பதாலா?

”அப்படியெல்லாம் இல்லை. அவங்க நடிக்கலனாலும் மெயின் கமல் சார்தான். மலையாளத்தில் ‘த்ரிஷ்யம் 2’ பண்ணிய மீனாதான், இப்போ தெலுங்கிலும் பண்ணினார். கெளதமி இல்லையென்றால் மீனாவோ இல்லை வேறு யாரோ நடிப்பார்கள். எங்களுக்கு முக்கியமாக கமல்சார் இருக்கணும். அவ்வளவுதான். ’பாபநாசம் 2’ வில் கமல் சார் நடித்தால் நடிகைகள் யார் வேண்டுமென்றாலும் பண்ணலாம். மற்றபடி கமல் சாருக்கு நேரம் இருந்தால் மட்டுமே ’பாபநாசம் 2’ எடுப்போம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com