மகளுடன் நடிகர் பக்ரு: வைரலாகும் ஸ்பெஷல் புகைப்படம்!

மகளுடன் நடிகர் பக்ரு: வைரலாகும் ஸ்பெஷல் புகைப்படம்!
மகளுடன் நடிகர் பக்ரு: வைரலாகும் ஸ்பெஷல் புகைப்படம்!

நடிகர் பக்ரு தனது மகளுக்கு ஒரே நிற உடையில் வந்து பிறந்த நாள் வாழ்த்து கூறிய புகைப்படம் கேரளாவில் வைரலாகியுள்ளது. 

பிரபல மலையாள நடிகர் பக்ரு. இவர் தமிழில், ஜீவா நடித்த டிஷ்யூம், விஜய் நடித்த காவலன், சூர்யா நடித்த ஏழாம் அறிவு, விநயன் இயக்கிய அற்புதத் தீவு உட்பட சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார்.

2 அடி 6 இஞ்ச் உயரம் கொண்ட பக்ரு, முழுநீளப் படத்தில் நடித்த மிகக் குள்ளமான நடிகர் என்ற சாதனைக்காக கின்னஸில் இடம் பிடித்தவர். மலையாளத்தில் 'குட்டியும் கோலும்' என்ற படத்தை இயக்கியும் உள்ளார். இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு காயத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தீப்தா கீர்த்தி என்ற மகள் உள்ளார். தீப்தாவுக்கு கடந்த 5 ஆம் தேதி, பிறந்த நாள். 

பக்ரு, ’இளையராஜா’ என்ற மலையாளப் படத்தில் கதையின் நாயகனாக நடித்துவருகிறார். மகளின் பிறந்த தினத்தை முன்னிட்டு படப்பிடிப்பு அரங்கத்துக்கு மகளை வரவழைத்த பக்ரு, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஏனென்றால் அந்த படத்தில் செஸ் வடிவம் கொண்ட உடையை அப்பாவும் மகளும் அணிந்துள்ளனர். தனித்துவமான இந்த உடை பற்றி சமூகவலைத் தளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 

‘இளையராஜா’ படத்துக்கான காஸ்ட்யூம் இது. அதே காஸ்ட்யூமில் மகளுக்கும் உடை தைத்து மகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக் கிறார் பக்ரு.

இந்நிலையில் 'இளையராஜா' படத்தின் மோசன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மாதவ் ராமதாசன் இயக்கியுள்ள இந்த படத்தின் போஸ்டருக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com