தமிழுக்கு வருகிறார் பாகிஸ்தான் பாடகர்

தமிழுக்கு வருகிறார் பாகிஸ்தான் பாடகர்

தமிழுக்கு வருகிறார் பாகிஸ்தான் பாடகர்
Published on

பாகிஸ்தான் பாடகரான ஆதிஃப் அலி, நகுல் நடித்துள்ள செய் படம் மூலம் தமிழுக்கு வருகிறார்.

பாகிஸ்தான் பாடகரான ஆதிஃப் அலி, சில இந்திய பாடல்களை பாடியுள்ளார். ராய் லட்சுமி நடித்துள்ள ’ஜூலி 2’ என்ற இந்தி படத்துக்கு இசை அமைத்துள்ள நான்கு பேரில் இவரும் ஒருவர்.

இவர் நகுல் நடித்துள்ள 'செய்' என்ற படத்தில் ‘இறைவா..’ என்று தொடங்கும் பாடலை பாடியுள்ளார். இவருடன் இணைந்து ஹிந்துஸ்தானி பாடகர் சபதஸ்வரா ரிஷுவும் இந்தப் பாடலை பாடியுள்ளார். கேட்டதும் அனைவருக்கும் பிடிக்கும் பாடலாக இந்த சூஃபி பாடல் இருக்கும் என்று தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

நிக்ஸ் லோபஸ் இசையமைப்பில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். ‘ட்ரிப்பி டர்ட்டிள் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் மன்னு மற்றும் உமேஷ் இணைந்து படத்தை தயாரிக்கின்றனர். டிசம்பர் 8ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com