யுனிசெப்-பில் இருந்து பிரியங்கா சோப்ராவை நீக்கக் கோரி பாக். மனு!

யுனிசெப்-பில் இருந்து பிரியங்கா சோப்ராவை நீக்கக் கோரி பாக். மனு!
யுனிசெப்-பில் இருந்து பிரியங்கா சோப்ராவை நீக்கக் கோரி பாக். மனு!

இந்திய விமானப்படைக்கு ஆதரவு தெரிவித்ததால், யுனிசெப் (UNICEF) நல்லெண்ண தூதர் பதவியில் இருந்து நடிகை பிரியங்கா சோப்ராவை நீக்க வேண்டும் என்று பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் மனு அளித்துள்ளனர்.

புல்வாமாவில் பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தக் கொடூரத் தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு நடத்தியது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்துக்கு எதிராக, இந்தியாவில் கொந்தளிப்பு மனநிலை ஏற்பட்டது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே அதிகரித் தது.

இதைத் தொடர்ந்து கடந்த 26 ஆம் தேதி பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை சரமாரியாகக் குண்டுகளை வீசின. இந்தத் தாக்குதலில் பயங்கவாத முகாமில் இருந்த சுமார் 300-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து இந்திய விமானப்படைக்கு இந்தியர்கள் ஏராளமானோர் வாழ்த்துத் தெரிவித்தனர். சமூக வலைத்தளங்கள் வாழ்த்துகளால் நிரம்பியது. சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அவர்களில் ஒருவராக, நடிகை பிரியங்கா சோப்ராவும் ’ஜெய் ஹிந்த்’ என்று கூறியிருந்தார். நடிகை பிரியங்கா சோப்ராவின் தந்தை அசோக் சோப்ராவும் தாய் மது சோப்ராவும் இந்திய ராணுவத்தில் மருத்துவர்களாகப் பணியாற்றியவர்கள்.

பிரியங்கா சோப்ரா, யுனிசெபின் நல்லெண்ண தூதராக இருக்கிறார். இந்திய ஆயுதப்படைக்கு பிரியங்கா சோப்ரா ஆதரவளித்திருப்பதால் அவர், இந்தப் பதவியை வகிக்கக் கூடாது என்று சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் பிரியங்கா சோப்ராவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை வைத்தனர்.

நடுநிலை வகிக்க வேண்டிய பிரியங்கா சோப்ரா, இந்திய ஆயுதப்படைகளுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம், அந்தப் பதவி வகிக்க தகுதியி ல்லாதவர் ஆகிவிட்டார். அதனால் உடனடியாக அந்தப் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்றும் இல்லை என்றால் யுனிசெப், அவரை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். இது தொடர்பாக ஆன்லைன் மூலம் யுனிசெப்-புக்கு அவர்கள் மனு அளித்துள்ளனர். அதில் சுமார் 2,200 பேர் கையெழுத்திட்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com