\
பத்மாவதி விவகாரத்தில் தீபிகாவை மிரட்டுவது சரியல்ல: ராய் லட்சுமி கண்டனம்

பத்மாவதி விவகாரத்தில் தீபிகாவை மிரட்டுவது சரியல்ல: ராய் லட்சுமி கண்டனம்

பத்மாவதி விவகாரத்தில் தீபிகாவை மிரட்டுவது சரியல்ல: ராய் லட்சுமி கண்டனம்
Published on: 

பத்மாவதி திரைப்பட விவகாரத்தில் நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதற்கு, நடிகை ராய் லட்சுமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், பத்மாவதி படத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனேவுக்கு கொலை மிரட்டல் விடுப்பது ஏற்புடையதல்ல. ஒரு நடிகையாக அவர் தனது பணியை செய்துள்ளார். படத்தில் எது வேண்டுமானாலும் இடம்பெற்றிருக்கலாம், படத்தில் ஏதாவது தவறாக சித்தரிக்கப்பட்டிருந்தால் படத்தை எதிர்க்கலாம். அதற்கு எல்லா உரிமையும் உள்ளது. அதைவிடுத்து ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்த நடிகையை மிரட்டுவது சரியானதல்ல. இச்செயலை அரசாங்கம் வேடிக்கை பார்ப்பது ஏற்புடையதாக இல்லை. அரசாங்கம் இதை வேடிக்கை பார்ப்பது அச்சமடைய செய்வதாக ராய் லட்சுமி கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com