\
ஜனவரி 25-ல் ‘பத்மாவத்’ரிலீஸ் உறுதி

ஜனவரி 25-ல் ‘பத்மாவத்’ரிலீஸ் உறுதி

ஜனவரி 25-ல் ‘பத்மாவத்’ரிலீஸ் உறுதி
Published on

சர்ச்சைக்குள்ளான பத்மாவதி திரைப்படம், பத்மாவத் என்று பெயர் மாற்றப்பட்ட நிலையில், வருகின்ற ஜனவரி 25-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. டிசம்பர் ஒன்றாம் தேதி இந்தப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. படத்தில் ராஜபுத்திரர்கள் பற்றியும், ராணி பத்மாவதி பற்றியும் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி எதிர்ப்பு எழுந்தது. ராஜ்புத் கர்னி சேனா அமைப்பு தீவிரமாக போராட்டகளை நடத்தியது.  ராஜஸ்தான் உள்ளிட்ட சில வட மாநிலங்களில் படத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. பாஜக தலைவர்கள், முதலமைச்சர்கள் பலரும் படத்திற்கு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தனர். கடும் எதிர்ப்பால் படம் திரையிடுவது தள்ளிப்போனது.

பத்மாவதி படம் கடந்த டிசம்பர் 28-ம் தேதி திரைப்பட தணிக்கை வாரியக் குழுவிற்கு சென்றது. படத்தில் எழுந்த வரலாற்று சிக்கல்கள் காரணமாக தணிக்கைக் குழுவால் அமைக்கப்பட்ட சிறப்பு பார்வைக் குழு இந்தப் படத்தை பார்வையிட்டது. 

படத்தை பார்வையிட்ட சிறப்பு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்க முடிவு செய்தது. மேலும் பத்மாவதி என்ற பெயரை பத்மாவத் என்று மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட சில பரிந்துரைகளை தணிக்கைக் குழு முன் வைத்தது. தயாரிப்பாளர்கள் தரப்பில் இந்தப் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

தடைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ள நிலையில், பத்மாவத் திரைப்படம் ஜனவரி 25ஆம் தேதி நாடு முழுவதும் ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 25-ம் தேதி அக்‌ஷய் குமார் நடித்த பேட் மேன் திரைப்படமும் ரிலீஸ் ஆகிகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com