நடிகர் மம்மூட்டி, மாதவனுக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு
நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷன் விருது அறிவிப்புweb

நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷன்.. நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ அறிவிப்பு!

நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மாதவனுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது..
Published on
Summary

இந்தியாவின் உயரிய பத்ம விருதுகள் 2026 குடியரசு தினத்தை முன்னிட்டு 131 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. நடிகர் மம்மூட்டிக்கு பத்மபூஷன் மற்றும் நடிகர் மாதவனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோகித் சர்மா மற்றும் ஹர்மன்ப்ரீத் கவுர் ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் பத்ம விருதுகள், ஆண்டுதோறும் குடியரசுத் தினத்தையொட்டி மத்திய அரசால் அறிவிக்கப்படும். அவை, பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன.

பத்ம விருதுகள்
பத்ம விருதுகள்

கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

நடிகர் மம்மூட்டி, மாதவனுக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு
பத்ம விருதுகள்| தமிழர்கள் 5 பேருக்கு பத்மஸ்ரீ விருது! யார் யார்?

அந்த வகையில் 2026 குடியரசு தினத்தை முன்னிட்டு மொத்தம் 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 5 பேருக்கு பத்மவிபூஷனும், 13 பேருக்கு பத்மபூஷனும், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித் சர்மா, ஹர்மன்ப்ரீத் கவுருக்கு பத்மஸ்ரீ விருதுகளும், நடிகர்கள் மம்மூட்டிக்கு பத்மபூஷன் விருதும், மாதவனுக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைச்சேர்ந்த 13 பேருக்கு பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சமூக பணிக்காக எஸ். கே. எம். மயிலானந்தன், மருத்துவத்திற்காக கள்ளிப்பட்டி இராமசாமி பழனிசுவாமி இருவருக்கும் பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் க.இரா.பழனிசுவாமி 2007ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

நடிகர் மம்மூட்டி, மாதவனுக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு
ரோகித் சர்மா, ஹர்மன்ப்ரீத் 2 பேருக்கும் பத்மஸ்ரீ விருது.. மொத்தம் 131 பத்ம விருதுகள் அறிவிப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com