அர்விந்த் சாமி வெளியிட்ட படைவீரன் பர்ஸ்ட் லுக்

அர்விந்த் சாமி வெளியிட்ட படைவீரன் பர்ஸ்ட் லுக்

அர்விந்த் சாமி வெளியிட்ட படைவீரன் பர்ஸ்ட் லுக்
Published on

பாடகர் விஜய் யேசுதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் படை வீரன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் அர்விந்த்சாமி வெளியிட்டார்.

இயக்குனர் மணிரத்னத்திடம் கடல், ஓ காதல் கண்மணி போன்ற படங்களில் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த தனா, இந்த படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். மாரி படத்தில் காவல்துறை அதிகாரியாக தனுஷுடன் மோதிய பாடகர் விஜய் யேசுதாஸ், படைவீரனில் கதாநாயகனாகிறார். அவருடன் இயக்குனர் பாரதி ராஜா முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். புதுமுகம் அமிர்தா என்பவர் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். நெடுஞ்சாலை படம் மூலம் கவனம் ஈர்த்த ராஜ்மோகன் ஒளிப்பதிவு செய்ய, மதிவாணன் இந்த படத்தை தயாரிக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com