\
‘படைப்பாளன்’ திரைப்படத்தில் முருகக் கடவுள் அவமதிப்பா? - சஷ்டி சேனா இந்து அமைப்பு புகார்

‘படைப்பாளன்’ திரைப்படத்தில் முருகக் கடவுள் அவமதிப்பா? - சஷ்டி சேனா இந்து அமைப்பு புகார்

‘படைப்பாளன்’ திரைப்படத்தில் முருகக் கடவுள் அவமதிப்பா? - சஷ்டி சேனா இந்து அமைப்பு புகார்
Published on

‘படைப்பாளன்’ திரைப்படத்தில் முருகக் கடவுள் அவமதிக்கப்பட்டுள்ளாரா என விசாரணை நடத்த வேண்டும் என்று சஷ்டி சேனா இந்து அமைப்பு புகார் கொடுத்துள்ளது.

சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் சரஸ்வதி, இன்று தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், " ‘படைப்பாளன்’ என்ற தமிழ் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில், தமிழ் முதற்கடவுளான முருகப்பெருமானை இழிவுபடுத்தும் காட்சி ஒன்று, ட்ரெய்லர் ஆக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தயாரிப்பாளர் பிரபுவிடம் அந்தக் காட்சியை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். ஃபோன் மூலமாக தொடர்பு கொண்டபோது, ‘நான் நீக்கி விடுகிறேன்’ என்று உறுதியளித்தார். ஏப்ரல் மாதம் 28-ஆம் தேதி 'படைப்பாளன்' திரைப்படம் வெளியாவதாக ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ் அப்பிலும் வந்தது. இது தொடர்பாக தயாரிப்பாளர் பிரபுவிடம் கேட்டால், அவமரியாதையாக பேசுகிறார். முருக கடவுளை இழிவு படுத்தி உள்ளாரா? என காவல்துறை விசாரணை நடத்த வேண்டும்" என்று புகாரில் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com