கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட 4 இயக்குநர்கள் இயக்கிய ‘பாவக்கதைகள்’; டீசர் வெளியீடு

கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட 4 இயக்குநர்கள் இயக்கிய ‘பாவக்கதைகள்’; டீசர் வெளியீடு
கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட 4 இயக்குநர்கள் இயக்கிய ‘பாவக்கதைகள்’; டீசர் வெளியீடு
Published on

நெட்ஃபிளிக்ஸ் , தனது தயாரிப்பில்  முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவகதைகள்” டீஸரை வெளியிட்டது !

இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள “பாவகதைகள்” ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகிறது. அதனையொட்டி இன்று அதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

”பாவக்கதைகள்”  காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை கூறும் நான்கு அழகான கதைகளை ஆந்தாலஜி வகையில் சொல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை  ரோனி ஸ்க்ரூவாலா வின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம்  தங்களது தளத்தில் 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது. 

தமிழின் புகழ்மிகு பெரு நட்சத்திரங்களான அஞ்சலி, பவானி ஶ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி, காளிதாஸ் ஜெயராம், சாந்தனு, கல்கி கொச்சிலின், பதம் குமார், பிரகாஷ் ராஜ், சாய் பல்லவி, மற்றும் சிம்ரனுடன் மேலும் பல முக்கிய நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com