'பாவக் கதைகள்' 'சாதி'த்ததா, சறுக்கியதா? - நெட்டிசன்களின் முதல் பார்வை!

'பாவக் கதைகள்' 'சாதி'த்ததா, சறுக்கியதா? - நெட்டிசன்களின் முதல் பார்வை!
'பாவக் கதைகள்' 'சாதி'த்ததா, சறுக்கியதா? - நெட்டிசன்களின் முதல் பார்வை!

நெட்ஃபிளிக்ஸ் தயாரிப்பில் முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான 'பாவக்கதைகள்' நேற்று வெளியானது. சாதியை மையக்கருவாகக் கொண்டு வெற்றிமாறன் சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் கௌதம் மேனன் ஆகியோர் இயக்கியுள்ள 'பாவக் கதைகள்' சாதித்ததா? சறுக்கியதா என்பது குறித்த நெட்டிசன்களின் பார்வை இங்கே தொகுப்பாக...

Fb/ karna sakthi

“படைப்பு மீதான நீண்ட யோசனைகளுக்கு பிறகு வந்த சிந்தனை என்னன்னா.. என்ன இருந்தாலும் ஆணவக்கொலை பண்ணறவனுகள பாசத்துக்காக ஏங்கும் சாதாரண அப்பாக்கள் மாதிரி காட்டுவது நேர்மையின்மைதானே? Evilகளை சாமானியர்களாக கட்டமைக்கிறது அபத்தம்தானே? இந்த இடம்தான் #பாவக்கதைகள் வர ஓர் இரவுல பிசகிப்போனதா தோணுது”.

Twitter/ ரோபல் போராளி: “எத்தன எபிசோட்னு பாக்காம அப்டியே ப்ளே கொடுத்துட்டேன்.. 4 எபிசோட் முடிஞ்சதும் போதும்டா சாமி இதுக்கு மேல தாங்குற சக்தி இல்லனு வெளிய வந்தா மொத்தமே 4 எபிசோட்தான்.”

Fb/Omprakash Viswanathan: “முதல் ரெண்டு எபிஸோட் அதிகாலையில் சட்டுன்னு பார்த்து முடிச்சேன், மூணாவது எபிஸோட் பார்க்கவே பயமா இருக்கு. அதை தவிர்க்க தோணுது, நாலாவது எபிஸோட் கம்ப்ளீட் பண்ண முடியல அதுவும் பயமாவே இருக்கு, பிரகாஷ்ராஜ் இந்த கேரக்டரை பண்ணிட்டு நார்மலா இருந்திருப்பாரான்னு சந்தேகமா இருக்கு.”

Twitter/Annadurai: “ஒவ்வொரு கதை பார்க்கும் போதும் எதோ கொடூரமா நடக்கப் போகுதுங்கிற படப்பிடிப்பிலே பார்க்க வேண்டியது இருக்கு.. பிஞ்சு உடம்பு பாவக்கதைகள்”.

Fb/ pratheep Kumar A: “வெற்றி மாறனோட ஒர் இரவு அருமை. இந்த சாதி வெறி புடிச்ச அப்பன்கள அப்படியே உறிச்சி வச்சிருக்காக. சுதா கொங்கராவோட தங்கமும் நல்லா இருந்துச்சு. காளிதாஸ் ஜெயராம் அபார நடிப்பு, பின்னி பெடலெடுத்துட்டாப்ல. மீதி இரண்டு கதையும் மொக்க. லவ் பண்ணா விட்ரணும்ல நரிக்குட்டியா நடிச்சிருக்க ஜாபர் சித்திக் அருமையான நடிப்பு.”

Fb/ராஜ் கமல்: ”இங்கு ஆணவக் கொலைகளையும் பாலியல் வன்கொடுமைகளையும் தினம் தினம் பார்க்கும் கேட்கும் சமூகம் ஒன்றுண்டு. ஆனால், அவர்களின் குரலை சிறிதளவாவது காது கொடுத்து கேட்க வைத்துவிடுமா என்ன? இந்த சமூகம் கேட்டாலும் கேட்காது போலே இருக்கும். கேட்கும் வரை கத்துவோம். பாவக் கதைகள் எல்லாம் பாவங்களே. அவரவர் திரைமொழி தெரிந்தார் போல் காட்சிப்படுத்தி உள்ளனர் நான்கு பேரும். ஆனால் யாருமே சரியாக கையாளவில்லையே ஆணவக் கொலைகள்.”

 Twitter/ சப்பாணி: “வான் மகள் படத்தில் கெளதம் மேனன் பேப்பர் வாங்கப் போகும்போது அடுத்த படமான ஓர் இரவு கதையின் முடிவை பெட்டிக்கடையில் தொங்கவிட்டிருப்பாங்க.. #பாவக்கதைகள்”.

FB/ Meenamma Kayal: “நாலு குறும்படம். நாலுமே ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை.. அட்டகாசம்.. மஸ்ட் வாட்ச். கவுதம்மேனன் படம் கூட பிடிச்சு போயிடுச்சுன்னா பாருங்களேன்.. இந்த அந்தாலஜி எவ்ளோ தரமானதான்னு.. ஆனா சும்மா சொல்லக்கூடாது ஹேட்ஸ் ஆஃப் கெளதம். இந்த மாதிரி கதைகளை இப்படி பிரசன்ட் பண்ண உங்களை விட்டா ஆளில்ல.

‘லவ் பண்ணா விட்ரனும்’ விக்னேஷ் சிவனின் ஆணவக்கொலை பற்றிய சீரியஸான கதை. அதுல காமெடி போர்சன் ட்ரை பண்றதுலாம் திறமை தான். "என் பொண்ணு உனக்கு பிட்டு படம் காட்டணுமாடா" சீனுக்குலாம் சிரிச்சு செதறிட்டேன்.. வெற்றிமாறனோட ஓர் இரவு குறும்படத்தை பார்த்தா ராமலிங்கம் கதறிடுவானேடா”.

Twitter/ மிது பேபி: சமுதாயத்தில் பெண்களுக்கு நடக்கும் பாவங்கள். Really i can't control my tears.. மனச ரொம்ப பாதிச்சிட்டு அதுக்காகவே டிவிட் பண்ண தோனுச்சு. தங்கம்.. ஓர் இரவு.. வான்மகள்.. இந்த மூனு ஸ்டோரியும் தரம்.”

Fb/ சோ நாகராஜன்: ”பாவக்கதைகள்" அனைத்து சாதிவெறியர்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். எனக்கு இதில் விக்னேஷ் சிவன், வெற்றிமாறன் இயக்கிய பகுதிகள் ரொம்ப பிடிச்சிருந்தது”.

Twitter/ Leena Manimekalai: “பசங்களோட பேசக்கூடாதுன்னு கட்டுப்படுத்தி வளர்க்கறதால யாரும் லெஸ்பியன் ஆகிறதில்ல தமிழகத்தின் மாபெரும் இயக்குநர்களே! #PaavaKadhaigal பரிதாபக்கதைகள். ஏம்பா நெட்ஃபிளிக்ஸ், உனக்கு அமெரிக்காவில மட்டும் அவா துவர்னே, ஸ்பைக் லீன்னு கண்ணு தெரியும். இந்தியான்னா குருடாயிடுமா?”.

Fb/Mani MKmani: “கெட்டுப் போன பழைய பால்ல கலர் ஊத்தி அத லஸ்ட் ஸ்டோரின்னு நம்பிக்குவாங்க போல. விக்னேஷ் சிவன் எபிசோட் தாங்க முடியலப்பா சாமி. அது எதுக்கு நாங்க லெஸ்பியன்ஸ் இல்லன்னு ஒரு அல்ப டிவிஸ்டு? செத்துப் போன ரெண்டுபேரும் திரும்பி வந்துருந்தா அந்த ட்விஸ்ட் இன்னும் நல்லா இருந்துருக்கும்.

எதுவும் வந்து கூடவில்லை. ஏற்கெனவே அந்தக் குடும்பம் மந்தமாக இருக்க, பேசாமல் சிம்ரனை காலி பண்ணியிருக்கலாம். வேறு என்ன சொல்லுவது என்றே புரியவில்லை. இணைய தளங்களில் இவர்கள் கண்டடைந்த சுதந்திரம் இவ்வளவு சொதப்ப வேண்டுமா, மூடு விழா பண்ணிடுவாங்க போல. இது கௌதம் மேனனின் லீலை”.

Fb/ shalini shalu: இனம் இனத்தோடதான் சேரணும் சிங்கம் சிங்கத்தோடதான் சேரணும். நாய் நாயோடதான் சேரணும். ஏன்ப்பா... அவ என்ன கொரங்கையா லவ் பண்ணா, மனுஷனத்தான ?  ஓ.. இது நம்ம பையன் இல்ல, ஆங்.. இது நம்ம பையன் இப்படி பார்த்து லவ் வரணும்ல. . அப்டிலாம் லவ் வராதுப்பா , அது லவ் ப்பா.. #பாவக்கதைகள் மிகவும் இளகிய இதயத்தோர் தவிர்க்கவும். எதார்த்தமான மேக்கிங்”.

Fb/ John Amu Bharat: ”எதிர்பாக்கல காளிதாஸ். சாந்தனு கூட . சுதா இதான் முதல் பெவரைட் இதுல”.

Twitter/ Arunaa: ”தத்துருபமாக அமைக்கப்பட்ட மிக கொடூரமான சம்பவம். நெஞ்சைப் பிளக்கிறது. ஒரு சிறுத்துளி கருணை இல்லா சமுதாயம், சாதி, சமயம், சடங்கு, சம்பிரதாயம், சட்டம். துயரம் தான் மிஞ்சியது. வெற்றிமாறன்#ஓர் இரவு”.

Fb/ Siva Raj: ” வலிகளை அடுத்தவங்களுக்கு கடத்துவதில் ஆகச்சிறந்த ஆளுமை வெற்றிமாறன் கடைசி பத்து நிமிஷம்”.

Fb/Arun Kumar: “பாவக்கதைகள் பார்த்தேன்... பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் சுதா கொங்கரா. சச்சின் மற்றும் கங்குலி இருவரில் ஒப்பீட்டு அளவில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்வோம் சச்சன் தான் என்று... ஏனெனில் அது தான் உண்மையும் கூட ஆனால் அதே நேரத்தில் சச்சின் 50 அடிக்கும் போட்டியில் கங்குலி 60 அடித்தால் எப்படியிருக்கும் அது தான் இன்று நடந்துள்ளது... வெற்றிமாறன் மற்றும் சுதா கொங்கரா ஆகிய இருவரில் ஒப்பீட்டு அளவில் யார் சிறந்த இயக்குநர் என்று கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு சொல்வோம் வெற்றிமாறன் தான் என்று. ஏனெனில் அது தான் உண்மையும் கூட.. அதே நேரத்தில் வெற்றிமாறன் நல்ல படம் எடுக்கும் பொழுது சுதா மிக நல்ல படம் எடுத்தால் எப்படியிருக்கும்? அது தான் இன்று நடந்துள்ளது. பாவக்கதைகள் தவறாமல் பாருங்கள்”.

Twitter/ pavan: ”பாவக்கதைகள் ரொம்ப அழகா இருந்துச்சி. தங்கம், ஓர் இரவு ரொம்ப impact பண்ணுச்சி”.

Fb/Aruna chalam: “நெட்ஃபிளிக்ஸ் - பாவக்கதைகள் - சுதா கொங்கரா டைரக்ட் பண்ண 'தங்கம்' இப்பத்தான் பார்த்தேன். மூன்றாம் பாலின மனிதர்களின் வாழ்க்கையை தனது சிறுகதைகளில் வடித்துள்ள மாப்பிள்ளை கணேச குமாரன் நியாபகம்தான் வந்தது. Visual ஆக காட்ட முடிந்த இந்த அரை மணிநேர படத்தை அரதப் பழசான காட்சி அமைப்புகள மூலம், இவ்வளவு நாடகத்தனமாக எடுத்து வைத்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் படும் துயரங்கள் குறித்து கணேசகுமாரனின் படைப்பில் இருந்த உழைப்பும், ஆழமான உளவியல் கூறுகளும், நம்மை படிக்கும் போதே பித்து நிலைக்குள் தள்ளிவிடும். கணேசகுமாரன், அர்ஷியா போன்ற திறமையான எழுத்தாளர்களின் படைப்புகளை படித்து விட்டு மிகுந்த செலவில் எடுக்கப்பட்டும் இதுமாதிரியான படங்களை பார்க்கும் போதுதான்...

புத்தகங்களின் மீதான காதல் அதிகரிக்கிறது”.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com