’எல்லாம் நீலம் மயம்’..பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

’எல்லாம் நீலம் மயம்’..பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

’எல்லாம் நீலம் மயம்’..பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
Published on

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது.

‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ ‘சார்பட்டா பரம்பரை’ உள்ளிட்ட படங்களின் மூலம் தனி முத்திரை பதித்தவர் பா.ரஞ்சித். தற்போது பா.ரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். அவரது நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனமும், யாழி பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன், டான்ஸிங் ரோஸ் ஷபீர் ஆகியோர் நடிக்கின்றனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தென்மா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் காதல் கதையாக உருவாகி வரும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தைத் தொடர்ந்து ‘சியான் 61’, ‘வேட்டுவம்’, ‘உலக நாயகன் 233’ ஆகியப் படங்களை பா.ரஞ்சித் இயக்க உள்ளார். மேலும் ஜார்கண்ட் மாநிலத்தின் பழங்குடியின மக்களின் தலைவராகவும், இந்திய சுதந்திரப் போராட்ட வீரராகவும் திகழ்ந்த பிர்ஸா முண்டாவின் பயோபிக் படத்தை பாலிவுட்டில் பா.ரஞ்சித் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com