\
ஓவியாவை விட்டா யாரு? இது பட டைட்டில்!

ஓவியாவை விட்டா யாரு? இது பட டைட்டில்!

ஓவியாவை விட்டா யாரு? இது பட டைட்டில்!
Published on

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியாவின் புகழ் விண்ணை முட்டி இருக்கிறது. ஆண்டிபட்டி முதல் அண்ணாசாலை வரை எங்கும் அவரைப்பற்றிதான் ஒரே பேச்சு. அவருக்கான இந்த பப்ளிசிட்டியால் தமிழ் சினிமா நடிகைகள் சிலர் தவித்துக் கிடக்கிறார்கள். ஓவியாவுக்கு சினிமாவில் வாய்ப்புக் கொடுக்க இயக்குநர் காத்துக்கிடக்கிறார்கள். மற்றொரு பக்கம் ஓவியவின் பெயரைப்பயன்படுத்தி தங்களது படத்திற்கு பப்ளிசிட்டி தேடும் முயற்சியில் சில படைப்பாளிகள் களமிறங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் தான் ராஜதுரை இயக்க இருக்கும் படத்திற்கு ’ஓவியாவை விட்டா யாரு’ என தலைப்பிட்டு இருக்கிறார். மதுரை செல்வம் தயாரிக்கும் இப்படத்தில் ஓவியா நடிக்கவில்லை. அவரது பெயரை மட்டுமே பயன்படுத்த இருக்கிறார்கள். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கஞ்சா கருப்பு, வையாபுரி ஆகியோர் இந்தப்படத்தில் நடிக்க இருக்கின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com