நடிகை ஓவியா நியூ இயருக்காக ஸ்பெஷல் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
கமல்ஹாசனின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகை ஓவியா எதை செய்தாலும் அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. ஆகவேதான் அவரை எப்படியாவது தங்களின் படத்தில் நடிக்க வைத்துவிட வேண்டும் என கோடம்பாக்கம் ஆட்கள் போட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் நடிகர் சிம்பு இசையமத்துள்ள நியூ இயர் ஸ்பெஷல் பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகை ஓவியா பாடியுள்ளார். 'மரண மட்ட' என்று தொடங்கும் இந்தப் பாடலை ஓவியாவின் குரலில் கேட்ட அவரது ரசிகர்கள் மிக உற்சாகமாகி கொண்டாடி வருகிறார்கள். சமூக வலைதளத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகப்படியான விருப்பங்கள் குவிந்து வருகின்றன.