\
‘திரும்ப திரும்ப அதையே கேட்காதிங்க..’ கடுப்பான ஓவியா..

‘திரும்ப திரும்ப அதையே கேட்காதிங்க..’ கடுப்பான ஓவியா..

‘திரும்ப திரும்ப அதையே கேட்காதிங்க..’ கடுப்பான ஓவியா..
Published on

‘களவாணி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஓவியா. தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்ட ஓவியா, நடிகரும் சக பிக்பாஸ் போட்டியாளருமான ஆரவ்வை காதலிப்பதாக நிகழ்ச்சியிலேயே தெரிவித்தார்.

ஆனால் ஓவியாவின் காதலை ஆரவ் ஏற்க மறுத்ததாக கூறப்பட்டது. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பின்னரும் ஆர்வ் - ஓவியா பற்றி சமூக ஊடகங்களில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்தின் ஹீரோயின் ராஹேவை கடந்த செப்டம்பர் மாதத்தில் ஆரவ் திருமணம் செய்து கொண்டார்.

இத்திருமண நிகழ்ச்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஆனால் ஓவியா மட்டும் கலந்து கொள்ளவில்லை.இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்த ஓவியாவிடம் ஆரவ்வின் திருமணத்தில் கலந்து கொள்ளாதது ஏன் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஓவியா, ‘’ஆரவ்வின் திருமணத்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்போது நான் கேரளாவில் இருந்ததால் தான், திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. எங்கள் இருவருக்குள் என்ன இருந்ததோ அது முடிந்துவிட்டது. இப்போது அவருக்கென ஒரு அழகான வாழ்க்கை அமைந்திருக்கிறது. இனி மீண்டும் அதைப்பற்றி கேட்காதீர்கள்” என்று கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com