ரசிகர்கள் குறித்து ஓவியா போட்ட லேட்டஸ்ட் ட்விட்
தனது ரசிகர்கள் பற்றி நடிகை ஓவியா ட்விட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்குப் பிறகு ஓவர் நைட்டில் ஓஹோ என்று உச்சத்திற்கு போனவர் நடிகை ஓவியா. அவர் தனது ரசிகர்களால் ட்விட்டரில் கொண்டாடப்படுகிறார். ‘ஓவியா ஆர்மி’ என்று ஹேஷ்டேக் போட்டு அவரை காப்பாற்றும் அளவுக்கு களத்தில் இறங்கி செல்பட்டு வருகிறார்கள் அவரது ரசிகர்கள். அவர் ஒருமுறை ‘நான் ஒரு சிங்கிள்’ என்று ஒரு ட்விட் போட்டார். அதனை சமூக வலைத்தளவாசிகள் கொண்டாடித் தீர்த்தனர்.
இந்நிலையில் இப்போது ஓவியா ‘லவ்’ பற்றி ஒரு ட்விட் போட்டிருக்கிறார். அதில், “ நான் வெற்றிகரமாக இருப்பதால் என் ரசிகர்கள் என்னை நேசிக்கவில்லை. என் ரசிகர்கள் என்னை நேசிப்பதால்தான், நான் வெற்றிகரமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார். அவர் ட்விட் போட்ட கொஞ்ச நேரத்திற்குள் அதனை ஆயிரக்கணக்கில் ஷேர் செய்து வருகின்றனர்.

