பாடலாசிரியர் சினேகனுடன் நடிகை ஓவியா ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
பிக் பாஸ் மூலம் அதிக மக்களால் விரும்பப்பட்டவர் ஓவியா. அதேபோல சில விமர்சனங்களை சம்பாதித்தவர் பாடலாசிரியர் சினேகன். இவர்கள் இருவரும் இணைந்து புதியதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இந்தப் படத்தை இசையமைப்பாளர் சி.சத்யா தயாரிக்க இருக்கிறார். இதற்கான அறிவிப்பை அவர் வெளியிடுள்ளார். இதற்கான நடிகர், நடிகைகளின் தேர்வு நடைப்பெற்று வருகிறது. விரைவில் இந்தப் படத்த்திற்கான படப்பிடிப்பை படக்குழு தொடங்க உள்ளது.