Owen Wilson நடித்துள்ள சீரிஸ் `Stick'. முன்னாள் கோல்ப் விளையாட்டு வீரர் வளர்ந்து வரும் கோல்ப் வீரரை சந்தித்த பின் என்ன நடக்கிறது என்பதே கதை.
Ajay Bhuyan இயக்கியுள்ள சீரிஸ் `Chhal Kapat: The Deception'. இன்ஸ்ட்டா இனஃப்ளூயன்சர் அவரது திருமணத்தில் இறந்து போக, அதன் பின் இருக்கும் மர்மத்தை விசாரிக்கும் காவலதிகாரியின் கதை.
Jane Harper எழுதிய The Survivors நாவலை மையமாக வைத்து அதே பெயரில் சீரிஸ் உருவாகியிருக்கிறது. புயல் ஒன்றின் பாதிப்புக்கு பிறகு சிலரின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதே கதை.
கரண் தேஜ்பால் இயக்கத்தில் அபிஷேக் பேனர்ஜி நடித்துள்ள படம் `Stolen'. கடத்தி செல்லப்படும் ஒரு குழந்தையை மீட்க புறப்படும் சகோதரர்களின் கதை.
அபிஷான் ஜீவிந்த் இயக்கத்தில் சசிக்குமார், சிம்ரன் நடித்த படம் `டூரிஸ்ட் ஃபேமிலி'. இலங்கையில் இருந்து தப்பி சென்னை வரும் ஒரு குடும்பத்தின் கதை.
கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் சன்னி தியோல் நடித்த படம் `Jaat'. ரணதுங்கா என்ற கிராமத்தில் உள்ள பிரச்சனைகளை ஒரு வழிப்போக்கன் தீர்க்க முயல்வதே கதை.
Lawrence Lamont இயக்கிய படம் `One of Them Days'. Dreux - Alyssa இருவரும் வாடகை பணத்தை திருடிச் சென்ற Alyssaவின் பாய் ஃப்ரெண்ட்டை தேடி கிளம்புவதே கதை.
அபிலாஷ் இயக்கத்தில் சப்தகிரி நடித்த படம் `Pelli Kani Prasad’. வரதட்சணை மூலம் பணம் பெரும் பேராசையுள்ள குடும்பத்தால், பிரசாத்தின் திருமணம் தள்ளிப் போகிறது. தன் திருமணத்துக்கு பிரசாத் எடுக்கும் முயற்சிகளே கதை.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் விஷ்ணு விஷால், விக்ராந்த், சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்த படம் `லால் சலாம்’. திரையரங்க வெளியீட்டுக்கு ஓராண்டுக்குப் பின் ஓடிடியில் EXTENED VERSION ஆக வெளியாகிறது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் - சிம்பு நடித்துள்ள படம் `தக் லைஃப்'. ஒரு கேங்க்ஸ்டர் குழுவினிடையே நடக்கும் அதிகாரப் போராட்டங்களே கதை.
சிவபிரகாஷ் இயக்கத்தில் விஜித், ஷாலி நடித்துள்ள படம் `பேரன்பும் பெருங்கோபமும்'. சாதியத்துக்கு எதிரான படமாக உருவாகியிருக்கிறது.
கார்த்திகேயன் மணி இயக்கத்தில் காளிவெங்கட், ரோஷினி நடித்துள்ள படம் `மெட்ராஸ் மேட்னி'. ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் சம்பவங்களே கதை.
இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் விமல், சாயா தேவி, எம் எஸ் பாஸ்கர் நடித்துள்ள படம் `பரமசிவன் ஃபாத்திமா'. கிராமத்தில் நடக்கும் ஒரு போராட்டமே கதை.
சேதுநாத் இயக்கத்தில் ஆசிஃப் அலி நடித்துள்ள படம் `Abhyanthara Kuttavaali'. சகாதேவனின் திருமணத்துக்கு பிறகு அவன் வாழ்வில் என்ன நிகழ்கிறது என்பதே கதை.
தரண் இயக்கத்தில் அக்ஷய்குமார், ரிதேஷ், அபிஷேக் பச்சன், சஞ்சய் தத் நடித்துள்ள படம் `Housefull 5'. இந்த முறை நண்பர்கள் எதிர்கொள்ளும் புதிய சவால் என்ன என்பதே கதை.
Mike Flanagan இயக்கியுள்ள படம் `The Life of Chuck'. Charles Krantz என்ற மனிதனின் வாழ்க்கை சம்பவங்களே கதை.
Wes Anderson இயக்கத்தில் Benicio Del Toro நடித்துள்ள படம் `The Phoenician Scheme'. Zsa-zsa Korda தனது மகளை தொழில் வாரிசாக மாற்றிய பின் என்ன நடக்கிறது என்பதே கதை.