Only Murders in the Building சீரிஸின் மூன்றாவது சீசன் வந்திருக்கிறது. 2021லிருந்து ஆண்டுக்கு ஒரு சீசனை வெளியிட்டி வருகிறார்கள். ஒரு அப்பார்ட்மெண்டில் நிகழும் மர்மமான மரணம், அதே அப்பார்ட்மெண்டில் வசிக்கும் மூவர், தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் கொலையாளி யாராக இருக்கும் என விசாரிக்கத் துவங்குகிறார்கள். பரபரப்பாகவும் காமெடியாகவும் நகரும் சீரிஸ். பத்தில், முதல் இரண்டு எப்பிசோடுகள் ஆகஸ்ட் 8லும், அடுத்தடுத்த எப்பிசோடுகள் வாரா வாரமும் வர இருக்கிறது.
Nila Madhab Panda இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தி சீரிஸ் `The Jengaburu Curse’. லண்டனில் வசிக்கும் ப்ரியா தாஸ் தன் தந்தை காணாமல் போனது தெரிந்ததும், ஓடிசாவுக்கு செல்கிறார். தந்தையைத் தேடும் போது அவர் தெரிந்து கொள்ளும் உண்மைகள் என்ன? தந்தை என்ன ஆனார் என்பதுதான் கதை.
அமெரிக்கா சந்தித்த opioid epidemic பாதிப்புகள், அதனைத் தொடர்ந்து நடந்தவை என்ன என்பதைப் பற்றி சொல்லும் சீரிஸ் தான் `Painkiller'
ஜாலி கேலியாக வாழும் இளைஞர்கள், அவர்களின் ஆஃபீஸ் வாழ்க்கையை சொல்லும் சீரிஸ் தான் `வேற மாறி ஆஃபீஸ்’.
2019ல் வெளியான இந்தி சீரிஸ் Made In Heavenனின் இரண்டாவது சீசன். ரிலேஷன்ஷிப் சிக்கல்களைப் பற்றி முதல் சீசன் பேசியது போல, இந்த சீசனும் பல விஷயங்களைப் பேச இருக்கிறது. Zoya Akhtar, Alankrita Shrivastava, Neeraj Ghaywan, Nitya Mehra ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள்.
முருகேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `வான் மூன்று’. சுஜித் - ஸ்வாதி, ஜோஷ்வா - ஜோதி, சிவன் - சித்ரா எந்த மூன்று ஜோடிகளின் காதல் கதையை சொல்லும் படமாக உருவாகியிருக்கிறது.
Matthew Lopez இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Red, White & Royal Blue'. அமெரிக்க பிரசிடெண்டின் மகனும், ப்ரிட்டிஷ் இளவரசனுக்கும் இடையே காதல் உருவாகிறது. ஆனால் அந்த உறவு அரசியல் காரணங்களுக்காக பல சிக்கல்களுக்கு ஆளாகிது. இறுதியில் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதே கதை.
Tom Harper இயக்கத்தில் Gal Gadot, Alia Bhatt நடித்திருக்கும் படம் `Heart Of Stone'. ஏஜெண்ட் ரேச்சல் ஸ்டோன் ஒரு ஆபத்தான மிஷ்னுக்கு செல்கிறார். ஹார்ட் என்ற மர்மமான பொருள் ஒன்று எதிரிகளின் கைகளில் சேராமல் தடுத்து, அதை மீட்டு கொண்டு வரும் அவரது சாகசப் பயணம் தான் கதை.
Sudhi Maddison இயக்கத்தில் உருவான மலையாளப்படம் `Neymar'. இரண்டு நண்பர்களது வாழ்வில் நெய்மர் என்ற நாய்க்குட்டி வருகிறது, அதன் பின் தலைகீழாகும் அவர்களது வாழ்க்கை சரியானதா இல்லையா என்பதே கதை.
அனீல் இயக்கத்தில் உருவான தெலுங்குப் படம் `Hidimbha’. இரு காவலர்கள் வழக்கு ஒன்றை விசாரித்துக் கொண்டிருக்க, அதனிடையே நிறைய பெண்கள் காணாமல் போகிறார்கள். இதன் காரணத்தை ஹீரோ கண்டுபிடித்தாரா என்பதே கதை.
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த படம் `மாவீரன்’. ஒரு கார்டூன் ஆர்டிஸ்ட்டுக்கு, சக்தி கிடைக்கிறது. அதை அவர் எப்படி பயன்படுத்துகிறார் என்பதே கதை.
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் உருவான படம் `போர் தொழில்’. ஒரு சீரியல் கொலைகாரனைப் பிடிக்க இளம் காவல் அதிகாரியும், சீனியர் அதிகாரியும் மேற்கொள்ளும் சேசிங் தான் படத்தின் கதை.
சென்னா ஹெக்டே இயக்கத்தில் உருவாகியிருக்கும் மலையாளப்படம் `Padmini’. கல்லூரி ஆசிரியர் ரமேஷன் வாழ்க்கை ஒரு திடீர் திருப்பத்தால் கேலிக்குறியதாகிறது. அது சரியானதா இல்லையா என்பதே கதை.
லக்ஷ்மன் இயக்கத்தில் விக்கி கௌஷல் - சாரா அலி கான் நடித்த இந்திப் படம் `Zara Hatke Zara Bachke'. கபில் - சௌமி இருவரும் மகிழ்ச்சியான தம்பதி. கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும் இவர்கள், விவாகரத்து பெற முடிவு செய்கிறார்கள். அது குடும்பத்தினருக்குத் தெரிய வர, பின்பு நடக்கும் கலாட்டாக்கள் தான் மீதிக் கதை.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் `ஜெயிலர்’. டைகர் முத்துவேல் பாண்டியன் மிக சாதுவாக தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். ஒரு சூழலில் தான் யார் எனக் காட்ட வேண்டிய நேரம் வருகிறது, அதன் பின் நடக்கும் அதிரடி அடிதடிகள் தான் கதை.
தியான் ஸ்ரீனிவாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் மலையாளப்படம் `ஜெயிலர்’. சாந்தாராம் ஜெயிலராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அப்போது அவர் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனை, அதை எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் கதை.
தமிழில் அஜித் நடித்து வெளியான `வேதாளம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் தான் `Bhola Shankar'. மெஹர் ரமேஷ் இயக்கியிருக்கும் படத்தில் சிரஞ்சீவி, கீர்த்தி சுரேஷ், தமன்னா நடித்திருக்கிறார்கள். தங்கைக்கு வரும் ஆபத்துகளை அண்ணன் எப்படி தடுக்கிறார் என்ற அதே ஒன்லைன் தான்.
சனல் தேவன் இயக்கத்தில் இந்திரஜித் நடித்திருக்கும் மலையாளப்படம் `Kunjamminis Hospital'. புதிதாக திறக்கப்படும் மருத்துவமை, அங்கு நடக்கும் சில அமானுஷ்யமான விஷயங்களுக்கு காரணம் என்ன? அதை நிறுத்தினார்களா என்பதே கதை.
அமித் ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார், பங்கஜ் த்ரிபாதி நடித்திருக்கும் இந்திப் படம் `OMG 2'. 2012ல் வெளியான OMG படத்தின் சீக்குவலாக உருவாகியிருக்கிறது. சென்ற படத்தில் நாத்திகரின் பிரச்சனையை தீர்த்து வைக்கும் சிவன், இந்த பாகத்தில் கடவுள் நம்பிக்கை நிரம்பிய ஒருவரின் பிரச்சனையை தீர்க்க செல்கிறார். மேலும் பாலியல் கல்வியின் அவசியம் பற்றி படம் பேசுவதாகவும், அதற்காகவே ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
பனிதீப் இயக்கத்தில் சிம்ஹா கொடூரி, காய்வா கல்யாண்ராம், அனுஹாசன் நடித்திருக்கும் தெலுங்குப் படம் `Ustaad’. வாழ்க்கையில் எந்த இலக்கும் இல்லாத ஒரு இளைஞன், எப்படி தன் கனவை கண்டுபிடிக்கிறான், அதை எப்படி சாதிக்கிறான் என்பதே கதை.