Movies this week
Movies this weekPT Desk

Joe | Extra Ordinary Man | Devil | Main Atal Hoon - இந்த வார ரிலீஸ் லிஸ்ட் இதோ...!

ஹாட்ஸ்டாரில் ஜோ, ஆஹா-வில் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது தொடங்கி தியேட்டரில் முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பயோபிக் வரை இந்த வாரம் வெளியாகும் பல படங்களின் லிஸ்ட்... இதோ இங்கே!

1. Death and Other Details (English) Hotstar - Jan 16

Death and Other Details
Death and Other Details Hotstar

மர்டர் மிஸ்ட்ரி சீரிஸாக உருவாகியிருக்கிறது `Death and Other Details'. சொகுசுக் கப்பல் ஒன்றில் பயணிக்கிறார் டிடெக்டிவ் Rufus Coteworth. அந்த கப்பலின் ஒரு பூட்டப்பட்ட அறையில் கொலை நடக்கிறது. இந்தக் கொலையை செய்தது யார் என்பதே கதை.

2. Indian Police Force (Hindi) Prime - Jan 19

Indian Police Force
Indian Police Force Prime

பாலிவுட்டின் மசாலா சினிமா புகழ் ரோஹித் ஷெட்டி, சுஷ்வந்த் பிரகாஷுடன் இணைந்து இயக்கியிருக்கும் சீரிஸ் `Indian Police Force’. சித்தார்த் மல்ஹோத்ரா, சில்பா ஷெட்டி, விவேக் ஓபராய், இஷா தல்வார் நடித்திருக்கிறார்கள். டெல்லி போலீஸுக்கும் தீவிரவாத கும்பலுக்கும் இடையில் நடக்கும் யுத்தமே கதைக் களம்.

3. American Nightmare (English) Netflix - Jan 16

American Nightmare
American Nightmare Netflix

Denise Huskins வாழ்க்கையில் நடந்த சம்பவத்தைப் பற்றிய ஆவணத் தொடர் `American Nightmare'. 2015ல் வீட்டில் மர்ம நபர் நுழைந்து Denise Huskins கடத்துகிறார்கள். இதன் பின் நடந்தவை என்ன என்பதை விளக்குகிறது இந்த ஆவணத் தொடர்.

4. The Kitchen (English) Netflix - Jan 19

The Kitchen
The KitchenNetflix

Kibwe Tavares and Daniel Kaluuya இயக்கியிருக்கும் படம் `The Kitchen'. எதிர்காலத்தில் நிகழ்வது போன்ற கதைக் களம். தி கிச்சன் என்ற பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நினைக்கும் அதிகாரத்திற்கும், அதற்கு எதிரான போராட்டமுமே கதை.

5. Devil: The British Secret Agent (Telugu) Prime - Jan 14

Devil: The British Secret Agent
Devil: The British Secret AgentPrime

நந்தமுரி கல்யாண் ராம் நடிப்பில் உருவாகியிருக்கும் தெலுங்குப் படம் `Devil: The British Secret Agent'. 1945ல் பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு மர்மமான கொலை வழக்கை விசாரிக்க செல்கிறார் டெவில். பின்னணியில் சுபாஷ் சந்திர போஸ் வரும் இடத்தை தெரிந்து அவரை அழிக்க திட்டமிடுகிறார்கள் ப்ரிட்டிஷ் அதிகாரிகள். இந்த இரண்டின் முடிவு என்ன என்பதே கதை.

6. Joe (Tamil) Hotstar - Jan 15

Joe
JoeHotstar

ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ, மாளவிகா, பவ்யா நடித்த படம் `ஜோ’. இருவேறு காலகட்டங்கள் ஹீரோ வாழ்க்கையில் வரும் பெண்கள், அவர்களால் ஹீரோ வாழ்வில் நடப்பவை என்ன? என்பதே கதை.

7. #MayaLo (Telugu) Prime - Jan 15

#MayaLo
#MayaLoPrime

Megha Mithra Pervar இயக்கத்தில் உருவான படம் `#MayaLo'. ஒரு ரோட் ட்ரிப் கிரிஷ் - சிந்து இருவரின் வாழ்க்கையில் என்ன புரிய வைக்கிறது என்பதே கதை.

8. Odavum Mudiyadhu Oliyavum Mudiyathu (Tamil) Aha - Jan 19

Odavum Mudiyadhu Oliyavum Mudiyathu
Odavum Mudiyadhu Oliyavum MudiyathuAha

ரமேஷ் வெங்கட் இயக்கத்தில் உருவான படம் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது’. தியேட்டர் ஒன்றுக்குள் சிலர் அடைத்து வைக்கப்படுகின்றனர். மேலும் அங்கு ஒரு அமானுஷ்ய சக்தியும் இணைந்து கொள்ள பின்பு என்னாகிறது என்பதே கதை.

9. Extra Ordinary Man (Telugu) Hotstar - Jan 19

Extra Ordinary Man
Extra Ordinary ManHotstar

தெலுங்கில் Kick, Oosaravelli, Race Gurram, Temper பல ஹிட் படங்களின் கதாசிரியர் Vakkantham Vamsi. இவர் இயக்கத்தில் இரண்டாவதாக உருவான படம் `Extra Ordinary Man’. சினிமாவில் ஹீரோவாக ஆசைப்படும் இளைஞன், நிஜ வாழ்க்கையில் எப்படி ஹீரோ ஆனான் என்பதே கதை. படத்துக்கு இசை ஹாரீஸ் ஜெயராஜ்.

10. Philip's (Malayalam) Prime - Jan 19

Philip's
Philip'sPrime

ஆல்ஃப்ரெட் குரியன் ஜோசப் இயக்கத்தில் உருவான படம் `Philip's'. பிலிப்ஸின் குடும்பத்தையே உலுக்கும் ஒரு சம்பவம் நடக்கிறது. அதிலிருந்து எப்படி குடும்பமாக மீள்கிறார்கள் என்பதே படத்தின் கதை.

11. Vivekanandan Viralaanu (Malayalam) - Jan 19

Vivekanandan Viralaanu
Vivekanandan Viralaanu

மலையாளத்தில் ஜே சி டேனியலின் பயோபிக்கான `Celluloid' படத்தை இயக்கிய கமல், இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Vivekanandan Viralaanu'. ஒரு ஆணின் ரிலேஷன்ஷிப்களைப் பற்றிய காமெடி படமாக உருவாகியிருக்கிறது.

12. Main Atal Hoon (Hindi) - Jan 19

Main Atal Hoon
Main Atal Hoon

Ravi Jadhav இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Main Atal Hoon'. முன்னாள் இந்திய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பயோபிக் இது. அவரது வாழ்க்கைப் பயணத்தையும், கவிஞர் என்ற பக்கத்தையும் படத்தின் பதிவு செய்திருக்கிறார்கள்.

13. Anyone But You (English) - Jan 19

Anyone But You
Anyone But You

`Easy A;, `Friends with Benefits’, `Peter Rabbit’, `Peter Rabbit 2’ போன்ற படங்களை இயக்கிய Will Gluck படம் `Anyone But You’. தங்களது முதல் டேட்டிலேயே முட்டிக் கொள்ள இனி சந்திக்கக் கூடாது என நினைத்து பிரிகிறார்கள் Bea மற்றும் Ben. ஆனால் மீண்டும் ஒரு திருமணத்தில் இருவரும் சந்தித்துக் கொள்ள நேர்கையில் என்ன ஆகிறது என்பதே கதை.

14. Night Swim (English) - Jan 19

Night Swim
Night Swim

2014ல் McGuire மற்றும் Rod Blackhurs இயக்கி வெளியிட்ட நான்கு நிமிடக் குறும்படம் `Night Swim’. இப்போது அதே பெயரில் படமாக, Bryce McGuire உருவாகியிருக்கிறார். வல்லர் தனது குடும்பத்துடன் புது வீட்டுக்குள் குடிபெயர்கிறார். அங்கு இருக்கும் நீச்சல் குளத்தில் பல அமானுஷ்யங்கள் நடக்கிறது. பின்பு என்ன ஆகிறது என்பதே கதை.

15. The Beekeeper (English) - Jan 19

The Beekeeper
The Beekeeper

Suicide Squad, Fury போன்ற படங்களின் இயக்குநர் David Ayer இயக்கத்தில் Jason Statham நடித்திருக்கும் படம் `The Beekeeper'. தன்னுடைய பகைக்காக, பழிவாங்குப் படலத்தை துவங்குகிறார் ஹீரோ. அது எவ்வளவு பெரிய அதிர்வுகளை உண்டாக்குகிறது என்பதே படம்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com