The Marvels | ஜப்பான் |ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் | TIGER 3
The Marvels | ஜப்பான் |ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் | TIGER 3 Deepavali releases

The Marvels | ஜப்பான் |ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் | TIGER 3 | தீபாவளிக்கு உங்கள் சாய்ஸ் எது..?

இந்த தீபாவளிக்கு OTTல் இறுகப்பற்று, லேபிள், Kannur Squad போன்றவை வெளியாகவிருக்கின்றன.

1. Vigilante (Korean) Hotstar - Nov 8

Vigilante
VigilanteHotstar

Choi Jeong-yeol இயக்கத்தில் உருவாகியிருக்கும் கொரியன் சீரிஸ் `Vigilante’. பகலில் காவல்துறையில் பணி, இரவில் சட்டத்திலிருந்து தப்பிக்கும் குற்றவாளிகளை தண்டிக்கும் Vigilanteயாக என இரட்டை வாழ்க்கை வாழும் இளைஞனை பற்றிய கதைதான் இந்த சீரிஸினுடையது.

2. Label (Tamil) Hotstar - Nov 10

Label
LabelHotstar

அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் ஜெய், தான்யா ஹோப், மகேந்திரன் நடித்திருக்கும் சீரிஸ் `லேபில்’. தான் வாழும் இடத்தை வைத்து, சமூகம் கொடுக்கும் அடையாளத்தை மாற்ற நினைக்கும் வழக்கறிஞரின் கதைதான் இது.

3. Rainbow Rishta (Hindi) Prime - Nov 7

Rainbow Rishta
Rainbow Rishta Prime

Jaydeep Sarkar, Hridaye A Nagpal, and Shubhra Chatterji இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தி ஆவணத் தொடர் `Rainbow Rishta'. LGBTQIA+ சமூகத்தை சார்ந்தவர்கள் பற்றி பேசுகிறது இந்த தொடர். அவர்களில் காதல் பற்றியும், அவர்களின் துணை பற்றியும் விரிவாக பேசும் இந்த தொடர் ஸ்க்ரிப்ட்டட் அல்ல என சொல்கிறார்கள் க்ரியேட்டர்ஸ்.

4. Pippa (Hindi) Prime - Nov 10

Pippa
PippaPrime

இந்தியில் Airlift, Chef போன்ற படங்களை இயக்கிய Raja Krishna Menon, தற்போது இயக்கியிருக்கும் இந்திப் படம் `Pippa’. Captain Balram Singh Mehta 1971ல் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரில் தனது சகோதரர்களுடன் பங்காற்றியது குறித்த படம். படத்திற்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

5. The Killer (English) Netflix - Nov 10

The Killer
The Killer Netflix

பிரெஞ்ச் காமிக் புக்கை அதே பெயரில் படமாக்கி David Fincher இயக்கியிருக்கும் படம் `The Killer’. ஒரு Professional Assassin பற்றிய கதை. அவரது வாழ்வில் வரும் திருப்பங்கள், துரத்தல்கள் என பரபர த்ரில்லராக உருவாகியிருக்கிறது.

6. 007: Road to a Million (English) Prime - Nov 10

007: Road to a Million
007: Road to a MillionPrime

10 லட்சம் பவுண்ட் பரிசுத்தொகை, அதை அடைய ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு என வரும் ஷோ தான் `007: Road to a Million’. ஒன்பது ஜோடிகள், ஒவ்வொரு ஜோடிக்கும் டாஸ்க் கொடுக்கப்படும், ஜெயிப்பவருக்கு பரிசு. ஜேம்ஸ் பாண்ட் படங்களில் வரும் சாகசங்களையே டாஸ்க்காக வடிவமைத்திருப்பது கூடுதல் சுவாரஸ்யம்.

7. Irugapatru (Tamil) Netflix - Nov 6

Irugapatru
IrugapatruNetflix

யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்தார்த், அபர்ணதி, ஸ்ரீ, சான்யா ஐயப்பன் நடித்த படம் `இறுகப்பற்று’. மூன்று தம்பதிகள், அவர்களுக்குள் நிகழும் முரண்கள், உறவுச்சிக்கல் குறித்து பேசுகிறது படம். உண்மையில் குடும்பங்கள் கொண்டாடும் டேக் லைனுக்கு பொருத்தமான படம்.

8. Shot Boot Three (Tamil) Prime - Nov 7

அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் உருவான படம் `ஷாட் பூட் த்ரி’. நான்கு சிறுவர்களது வாழ்க்கைக்குள் ஒரு நாய் வளர்ப்பு பிராணியாக வருகிறது. அந்த நாய் காணாமல் போன பின் என்ன நடக்கிறது என்பதே கதை.

9. Valatty (Malayalam) Hotstar - Nov 7

Valatty
ValattyHotstar

10. The Road (Tamil) Aha - Nov 10

The Road
The RoadAha

அருண் வசீகரன் இயக்கத்தில் த்ரிஷா நடித்த படம் `தி ரோட்’. விபத்து ஒன்றில் தனது குடும்பத்தை இழந்துவிடுகிறார் மீரா. ஒரு கட்டத்தில் நடந்தது விபத்து அல்ல எனத் தெரியும் போது, அதன் பின்னால் இருக்கும் சதிவலையை தேடி செல்கிறார். அவர் தெரிந்து கொள்ளும் உண்மை என்ன? என்பதே கதை.

11. Kannur Squad (Malayalam) Hotstar - Nov 10

Kannur Squad
Kannur Squad Hotstar

ராபி வர்கீஸ் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த மலையாளப்படம் `Kannur Squad'. ஒரு க்ரிமினல் கூட்டத்தைப் பிடிக்க காவல்துறையின் தேடுதல் படலமே படத்தின் கதை.

12. Ghoomer (Hindi) Zee5 - Nov 10

Ghoomer
GhoomerZee5

பால்கி இயக்கத்தில் அபிஷேக் பச்சன், சயாமி கெர் நடித்த இந்திப் படம் `Ghoomer’. க்ரிக்கெட்டில் சாதனை செய்ய நினைக்கிறார் அனினா. ஆனால் விபத்து ஒன்றில் வலது கையை இழந்ததும் உடைந்து போகிறார். பேட்டராக சாதிக்க நினைத்தவரை, பந்து வீச்சாளராக மாற்ற பயிற்சியளிக்கிறார் பதம் சிங். இதன் பின் என்ன நடக்கிறது என்பதே படம்.

13. Japan (Tamil) - Nov 10

ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் `ஜப்பான்’. ஒரு திருடன், பல பேரை அலையவிட்டு திணரடிக்கிறான். அவனைப் பிடிக்க போலீஸ் போடும் திட்டங்கள் பலித்ததா இல்லையா என்பதே கதை.

14. Jigarthanda DoubleX (Tamil) - Nov 10

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கும் படம் `ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. 1975ல் மதுரையில் ஒரு இயக்குநரும் ஒரு கேங்க்ஸ்டரும் படம் உருவாக்க இணைகிறார்கள். இதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை.

15. Raid (Tamil) - Nov 10

கார்த்தி இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீதிவ்யா நடித்திருக்கும் படம் `ரெய்டு’. 2018ல் துனியா சூரி இயக்கத்தில் சிவராஜ்குமார் நடித்து கன்னடத்தில் வெளியான `தகரு’ படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியிருக்கிறது. ஒரு போலீஸுக்கும் அண்டர்வேல்டு தாதாக்களுக்கும் இடையேயான மோதன் தான் படம்.

16. Bandra (Malayalam) - Nov 10

Bandra
Bandra

அருண் கோபி இயக்கத்தில் திலீப் நடித்திருக்கும் மலையாளப்படம் `Bandra’. பாலிவுட் நடிகை தாராவின் தற்கொலை பற்றி விசாரிக்கிறார் இணை இயக்குநரான சாக்‌ஷி. அப்போது அலெக்ஸாண்ரின் கதையும் தெரிய வருகிறது. இவர்கள் இருவரின் கதை என்ன என்பதே படம்.

17. Vela (Malayalam) - Nov 10

Vela
Vela

ஷ்யாம் சசி இயக்கத்தில் ஷேன் நிகம், சன்னி வெய்ன் நடித்திருக்கும் மலையாளப்படம் `வேளா’. போலீஸ் கண்ட்ரோல் ரூமில் நடக்கும் நிகழ்வுகள் தான் படத்தின் கதை.

18. Garadi (Kannada) - Nov 10

Garadi
Garadi

யோக்ராஜ் பட் இயக்கியிருக்கும் கன்னடப்படம் `Garadi’. மல்யுத்தப் போட்டிகளை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது இந்தப் படம். கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் தர்ஷன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

19. The Marvels (English) - Nov 10

The Marvels
The Marvels

Nia DaCosta இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `The Marvels'. MCUன் 33வது படமான இதன் கதை, உலகத்துக்கு ஒரு பிரச்சனை வருகிறது அதை கேப்டன் மார்வல், மோனிகா, மிஸ் மார்வல் இணைந்து சாமாளிக்கிறார்கள் என்பதே கதை.

20. Kidaa (Tamil) - Nov 11

ரா வெங்கட் இயக்கத்தில் காளி வெங்கட், பூ ராமு நடித்திருக்கும் படம் `கிடா’. தாத்தா, பேரன், அவனது வளர்ப்பு ஆடு, ஒரு கறி கடைக்காரர். இவர்களை சுற்றி நடக்கும் கதை. தீபாவளிக்குள் வாழ்வின் மிக முக்கியமான முடிவை இந்தக் குடும்பம் எடுக்க வேண்டிய நிர்பந்ததிற்கு ஆளாகிறது. என்ன ஆகிறது என்பதே கதை.

21. Tiger 3 (Hindi) - Nov 12

Tiger 3
Tiger 3

இந்தியில் Band Baaja Baaraat, Ladies vs Ricky Bahl, Shuddh Desi Romance, Fan படங்களை இயக்கிய மனீஷ் ஷர்மா தற்போது இயக்கியிருக்கும் இந்திப்படம் `Tiger 3;. ஏஜெண்ட் டைகர் - ஸோயா இருவரும் தேச விரோதி என முத்திரை குத்தப்படுகிறார்கள். அந்த களங்கத்தை துடைக்க அவர்கள் எடுக்கும் அதிரடி முடிவுகளே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com