LGM LOVE PIZZA3 DD Returns
LGM LOVE PIZZA3 DD Returns Movies

ஒரே வாரத்துல எத்தனை படம்... அப்பப்பப்பப்பா..! LGM LOVE PIZZA3 DD Returns

இந்த வாரம் திரையரங்குகளில் நிறைய தமிழ்ப் படங்களும், நெட்பிளிக்ஸில் மாமன்னன் திரைப்படமும் வெளியாக இருக்கின்றன. இவற்றில் உங்கள் சாய்ஸ் எது?

Special Ops: Lioness (English) Jio Cinema - July 23

Special Ops: Lioness
Special Ops: LionessJio Cinema

Taylor Sheridan உருவாக்கியிருக்கும் சீரிஸ் Special Ops: Lioness. சிஐஏ ஆஃபீசர் ஜோ தன் குடும்ப வாழ்க்கை மற்றும் வேலையில் சந்திக்கும் சவால்களே இந்த சீரிஸின் கதை.

Kaalkoot (Hindi) Jio Cinema - July 27

Kaalkoot
KaalkootJio Cinema

விஜய் வர்மா - ஸ்வேதா த்ரிபாதி நடிப்பில் உருவாகியிருக்கும் இந்தி சீரிஸ் Kaalkoot. அமில வீச்சில் பாதிக்கப்பட்டவரின் வழக்கை கையாளும் ஒரு காவலதிகாரியின் கதை தான் இந்த சீரிஸ்.

How to Become a Cult Leader (English) Netflix - July 28

How to Become a Cult Leader
How to Become a Cult LeaderNetflix

மக்களின் நம்பிக்கையைப் பெற்று பெரிய ஆன்மீக குருவாக மாறியவர்கள் பற்றிய ஆவணத் தொடர் தான் இந்த How to Become a Cult Leader. அப்படி புகழடைந்து, சர்ச்சையிலும் சிக்கிய ஆறு நபர்களைப் பற்றி சொல்ல இருக்கிறது.

Twisted Metal (English) SonyLIV - July 28

Twisted Metal
Twisted Metal SonyLIV

மிகப் பிரபலமான வீடியோ கேம் Twisted Metalஐ தழுவி அதை ஒரு சீரிஸாக அதே பெயரில் உருவாக்கியிருக்கிறார் Kitao Sakurai. Anthony Mackie இந்த சீரிஸில் ஜான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஒரு பொருளை டெலிவரி செய்யும் வேலை கொடுக்கப்படுகிறது. அதில் அவர் சந்திக்கு சவால்கள் என்ன என்பதே கதை.

Paradise (German) Netflix - July 27

Paradise
ParadiseNetflix

தன் மனைவியிடமிருந்து வற்புறுத்தி அவளது வாழ்விலிருந்து 40 வருடத்தை பறிக்கிறார்கள். அதற்கு காரணமானவர்களை தேடி சென்று அந்த 40 வருடத்தை திரும்பப் பெற போராடும் ஒரு கணவனைப் பற்றிய ஃபேண்டசி கதைதான் ஜெர்மானியப் படமான Paradise.

Hidden Strike (English) Netflix - July 28

Hidden Strike
Hidden Strike Netflix

Expendables 4 படத்தை இயக்கிய Scott Waugh இயக்கத்தில் Jackie Chan மற்றும் John Cena நடித்திருக்கும் படம் Hidden Strike. இரண்டு முன்னாள் ராணுவ வீரர்கள் ஒரு மக்கள் குழுவை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லும் அட்வென்சர் தான் படத்தின் கதை.

Appatha (Tamil) Jio Cinema - July 29

Appatha
AppathaJio Cinema

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் ஊர்வசி நடித்திருக்கும் படம் `அப்பத்தா’. கண்ணம்மா என்ற பெண் தனது வாழ்வில் எதிர்கொள்ளும் பெரிய பயத்திலிருந்து எப்படி வெளிவருகிறார் என்பதே படத்தின் கதை.

Regina (Tamil) Prime - July 25

Regina
ReginaPrime Video

டோமின் இயக்கத்தில் சுனைனா நடித்த படம் `ரெஜினா’. தன் வாழ்க்கையில் பல விஷயங்களை இழந்த பெண், அதற்கு காரணமானவர்களை பழி வாங்குவது தான் படத்தின் கதை.

Maamannan (Tamil) Netflix - July 27

Maamannan
MaamannanNetflix

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு, உதயநிதி, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாப்பாத்திரங்களில் நடித்த படம் `மாமன்னன்’. சாதியும், தனிமனித வன்மமும், ஒருவனை எப்படி ஒடுக்கும் அவன் அதிகாரத்தில் இருந்தாலும் கூட கீழ்த்தனமாக நடத்தும் என்பதைப் பேசும் படம்.

Kolla (Malayalam) manoramaMAX - July 27

Kolla
KollamanoramaMAX

சுராஜ் வர்மா இயக்கத்தில் ரெஜிஷா விஜயன், ப்ரியா ப்ரகாஷ் வாரியர் நடித்த மலையாளப்படம் Kolla. இரண்டு பெண்கள் ஒரு ப்யூட்டி பார்லரை தொடங்குகிறார்கள். அதற்கு பின் அவர்களுக்கு வரும் ஒரு சிக்கல், அதிலிருந்து எப்படி தப்பித்தார்கள் என்பதே கதை.

Samajavaragamana (Telugu) Ah - July 28

Samajavaragamana
Samajavaragamana

ஸ்ரீவிஷ்ணு - ரெபா மேனிகா நடித்த தெலுங்குப் படம் Samajavaragamana. பாலு தனது தந்தைக்கும் காதலிக்கும் ஒரே நேரத்தில் ட்யூஷன் எடுக்கிறார். தந்தை டிகிரி பாஸ் ஆனால் தான் பரம்பரை சொத்து கிடைக்கும் என்ற சிக்கல், அதே சமயம் பாலுவின் காதலிலும் ஒரு சிக்கல். இதன் பிறகு என்ன ஆகிறது என்பதை காமெடி கலந்து சொல்கிறது படம்.

Kurukkan (Malayalam) - July 27

Kurukkan
Kurukkan

சீனிவாசன், வினீத் சீனிவாசன், ஷைன் டாம் சாக்கோ நடித்திருக்கும் மலையாளப்படம் Kurukkan. பணம் கொடுத்தால் பொய் சாட்சி சொல்லும் கிருஷ்ணன் ஒரு முக்கியமான வழக்கில் பொய் சாட்சி சொல்ல வருகிறார். அதனைத் தொடர்ந்து நடக்கும் காமெடிகளே படம்.

Lets Get Married (Tamil) - July 28

Lets Get Married
Lets Get Married

ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண், இவானா, நதியா நடித்திருக்கும் படம் `Lets Get Married’. ஒரு காதல் ஜோடி தங்கள் திருமணத்திற்கு, குடும்பத்தை சம்மதிக்க வைக்க போடும் திட்டங்கள் தான் படம்.

Love (Tamil) - July 28

Love
Love

காலித் ரஹ்மான் இயக்கி 2020ல் வெளியான மலையாளப் படம் Love. அதனை அதே பெயரில் பரத், வாணி போஜன் நடிப்பில் ரீமேக் செய்திருக்கிறார் ஆர்.பி.பாலா. ஒரு கணவன் மனைவிக்குள் நடக்கும் சண்டை எந்த எல்லைக்கு செல்கிறது என்பதே படத்தின் கதை.

Pizza 3 The Mummy (Tamil) - July 28

Pizza 3 The Mummy
Pizza 3 The Mummy

மோகன் கோவிந்த் இயக்கத்தில் அஸ்வின், பவித்ரா நடித்திருக்கும் படம் பீட்சா 3 தி மம்மி. ஒரு உணவகத்தில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் தான் படத்தின் கதை.

DD Returns (Tamil) - July 28

DD Returns
DD Returns

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்திருக்கும் படம் `டிடி ரிட்டர்ன்ஸ்’. பேயுடன் கேம் விளையாடி ஜெயித்தால் நிறைய பணம் பரிசாக கிடைக்கும், தோற்றால் மரணம். இந்த கேமில் ஹீரோ டீம் ஜெயித்ததா தோற்றதா என்பதை காமெடியாக சொல்லும் படம்.

Dinosaurs (Tamil) - July 28

Dinosaurs
Dinosaurs

மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக் நடித்திருக்கும் படம் `டைனோசர்ஸ்’. ஒரு பெரிய கேங்ஸ்டரை எதிர்த்து போராடும் இளைஞனைப் பற்றிய ஆக்‌ஷன் கமர்ஷியல் கதை.

Bro (Telugu) - July 28

Bro
Bro

தமிழில் சமுத்திரக்கனி இயக்கிய `விநோதய சித்தம்’ படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகியிருக்கிறது `Bro’. பவன் கல்யாண், சாய் தரம் தேஜ் இணைந்து நடித்திருக்கிறார்கள். வாழ்வில் எதற்கும் நேரமில்லை நேரமில்லை என ஓடிக் கொண்டிருக்கும் இளைஞனின் வாழ்வில், அந்த நேரமே ஒரு கதாபாத்திரமாக நுழைந்தால்? எப்படியிருக்கும் என்பதே கதை.

Voice of Sathyanathan (Malayalam) - July 28

Voice of Sathyanathan
Voice of Sathyanathan

திலீப் நடிப்பில் உருவாகியிருக்கும் மலையாளப்படம் `Voice of Sathyanathan'. வில்லன் போடும் மாஸ்டர் ப்ளானை முறியடிக்கும் ஒரு சாமானியன் பற்றிய கதையை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள்.

Rocky Aur Rani Kii Prem Kahaani (Hindi) - July 28

Rocky Aur Rani Kii Prem Kahaani
Rocky Aur Rani Kii Prem Kahaani

கரண் ஜோஹர் 7 வருட கேப்புக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம். மேலும் அவரது 25 வருட திரைப் பயணத்தை கொண்டாடும் படமாகவும் வர இருக்கிறது `Rocky Aur Rani Kii Prem Kahaani’ இந்தி சினிமா. ரன்வீர் சிங், அலியா பட் நடித்திருக்கும் இதில் வழக்கம் போல் கரண் ஜோஹர் ஸ்டைலில் காதல், செண்டிமெண்ட், காமெடி என பேக்கேஜோடு வர இருக்கிறது.

Haunted Mansion (English) - July 28

Haunted Mansion
Haunted Mansion

Justin Simien இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் Haunted Mansion. கேபி சிங்கிள் மதராக தன் மகனை வளர்த்து வருகிறார். இருவரும் வேறு வீட்டுக்கு குடிபெயர அங்கு பேய் இருக்கிறது என உணர்கிறார்கள். அதை விரட்ட ஒரு குழுவை ஏற்பாடு செய்கிறார், அதன் பின் நடக்கும் காமெடி கலாட்டாக்கள் தான் கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com