Sex Education Season 4
Sex Education Season 4OTT

Sex Education, John Wick, Fast X, Spy Kids இந்த வார OTTல நிறைய செம்ம..!

ஜான்விக் பட வரிசையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ஸ்பின் ஆஃப் சீரிஸே `The Continental: From the World of John Wick'.

1. Athidhi (Telugu) Hotstar - Sep 19

Athidhi
Athidhi

Y.G. Bharath இயக்கத்தில் உருவாகியிருக்கும் தெலுங்கு வெப் சீரிஸ் `Athidhi'. பல ரகசியங்களை உள்ளடக்கிய மேன்ஷன் ஒன்றுக்கு புதிதாக ஒருவர் வருகிறார். அதன் பின் வெளிவரும் ரகசியங்கள் என்ன என்பதே இந்த ஹாரர் சீரிஸின் கதை.

2. Sex Education S4 (English) Netflix - Sep 21

Sex Education S4
Sex Education S4

உலகம் முழுக்க புகழ்பெற்ற சீரிஸ் Sex Education. இதன் நான்காம் மற்றும் இறுதி சீசன் வர இருக்கிறது. பதின் வயதினரின் செக்ஸ் பற்றிய குழப்பங்களையும், பொதுவாக செக்ஸ் மீதிருக்கும் பிம்பமும், அது சார்ந்து வரும் உளவியல் ரீதியான சிக்கல்களையும் பற்றி பேசும் சீரிஸ் இது.

3. The Continental: From the World of John Wick (English) Prime - Sep 22

The Continental: From the World of John Wick
The Continental: From the World of John Wick

ஜான்விக் பட வரிசையை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ஸ்பின் ஆஃப் சீரிஸே `The Continental: From the World of John Wick'. ஜான்விக் மற்றும் பல காண்ட்ராக்ட் கில்லர்ஸின் சரணாலயமான காண்டினெண்டல் ஹோட்டல் பற்றியதே இந்த சீரிஸின் கதை.

4. Inside (English) Jio Cinema - Sep 17

Inside
Inside

Vasilis Katsoupis இயக்கத்தில் Willem Dafoe நடித்திருக்கும் படம் `Inside’. விலை உயர்ந்த ஓவியங்களை திருடுவதில் கில்லாடியான நீமோ ஒரு திடுட்டின் போது மாட்டிக் கொள்ள, பெரிய பெண்ட் ஹவுஸில் சிறை வைக்கப்படுகிறார். அங்கு முழுக்க பல விலை உயர்ந்த ஓவியங்கள் பல இருக்கிறது. எப்படியாவது அங்கிருந்து தப்பிக்க அவர் எடுக்கும் முயற்சிகளே கதை.

5. Jaane Jaan (Hindi) Netflix - Sep 21

Jaane Jaan
Jaane Jaan

கஹானி, பட்லா போன்ற இந்திப் படங்களை இயக்கிய சுஜாய் கோஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்திப் படம் `Jaane Jaan'. கரீனா கபூர் நடித்திருக்கும் இந்தப்படம் ஜப்பானிய நாவலான `The Devotion of Suspect X'ன் (தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் `கொலைகாரன்’) திரைப்பட தழுவல். அம்மாவும் மகளும் இணைந்து ஒரு கொலை செய்துவிட, அதிலிருந்து தப்பிக்க அவர்களுக்கு உதவுகிறார் ஒருவர். ஆனால் அந்த கொலை வழக்கை விசாரிக்கும் காவலதிகாரி தீவிரமாக ஆரய்கிறார். அடுத்து என்ன ஆனது என்பதே இந்த த்ரில்லர் படக் கதை.

6. No One Will Save You (English) Hotstar - Sep 22

No One Will Save You
No One Will Save You

Brian Duffield இயக்கத்தில் உருவான படம் `No One Will Save You'. ப்ரையன் தன்னந்தனியாக வாழும் ஒரு பெண். திடீரென நிகழும் ஒரு ஏலியனின் வருகை அவள் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே கதை.

7. Spy Kids: Armageddon (English) Netflix - Sep 22

Spy Kids: Armageddon
Spy Kids: Armageddon

Robert Rodriguez இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Spy Kids: Armageddon’. Spy Kids பட வரிசையில் ஐந்தாம் பாகமாக வருகிறது. சீக்கிரெட் ஏஜெண்ட்களாக வரும் குழந்தைகள், தங்களது பெற்றோரையும் உலகையும் காப்பாற்ற அவர்கள் செய்யும் சாகசங்களே படம்.

8. How To Deal With A Heartbreak (Spanish) Netflix - Sep 22

How To Deal With A Heartbreak
How To Deal With A Heartbreak

Joanna Lombardi இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஸ்பானிஷ் மொழி படம் `How To Deal With A Heartbreak'. தனது இரு நண்பர்களும் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்க, தான் மட்டும் தேங்கியிருப்பதை கவனிக்கிறார் Ma Fé. மிக நெருக்கடியான மனநிலையிலும், டெட் லைனுக்குள் புத்தகம் எழுத வேண்டிய அழுத்தத்திலும் இருக்கும் அவர் என்ன செய்கிறார் என்பதே கதை.

9. Fast X (English) Jio Cinema - Sep 18

Fast X
Fast X

Louis Leterrier இயக்கத்தில் வெளியான படம் `Fast X’. ட்ரக் கிங் பின் Hernan Reyesன் மகன் Dante Reyes, டோம்னிக்கையும், அவனது குடும்பம் நண்பர்களை அழிக்க நினைக்கிறான். அவனை எதிர்த்து டோம்னிக் குழு வென்றதா என்பதே கதை.

10. Dinosaurs (Tamil) Prime - Sep 19

Dinosaurs
Dinosaurs

எம்.ஆர். மாதவன் இயக்கத்தில் உருவான படம் `டைனோசர்ஸ்’. இரு குழுவின் பழிவாங்கும் படலத்தில் பலியாடாக ஒரு உயிர் போகிறது. அதன் பின் ஹீரோ என்ன செய்கிறார் என்பதே படத்தின் கதை.

11. Love Again (English) Netflix - Sep 20

Love Again
Love Again

Priyanka Chopra முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ஹாலிவுட் படம் `Love Again’. தான் மணக்க இருந்த நபர் இறந்து போன பின்பு அவரது மொபை நம்பருக்கு மெசேஜ் அனுப்புகிறார் மிரா ராய். இப்போது அந்த நம்பரை Rob வைத்திருக்கிறார். இதன் பின் இந்த இருவருக்குமான அறிமுகம் எதுவரை செல்கிறது என்பதே கதை.

12. King of Kotha (Malayalam) Hotstar - Sep 22

King of Kotha
King of Kotha

அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் உருவான மலையாளப் படம் ` King of Kotha'. கொத்தாவில் அட்டகாசம் செய்யும் இந்நாள் கேங்க்ஸ்டரை ஒழிக்க, முன்னாள் கேங்க்ஸ்டர் திரும்ப வருகிறார். அதன் பின் நடக்கும் அடிதடிகளே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com