PTsir | Furiosa | Turbo
PTsir | Furiosa | TurboPTsir | Furiosa | Turbo

PTsir | Furiosa | Turbo ... இந்த வார OTT , தியேட்டர் வாட்ச் லிஸ்ட் இதோ..!

அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் FURIOSA A MAD MAX SAGA, மம்முட்டி நடிப்பில் TURBO, ஹிப் ஹாப் ஆதியின் PT Sir போன்ற படங்கள் இந்த வார வாட்ச் லிஸ்ட்டில் இடம்பெற்றிருக்கின்றன.

1. Jurassic World: Chaos Theory (English) Netflix- May 24

Jurassic World: Chaos Theory
Jurassic World: Chaos TheoryNetflix

DreamWorks Animation உருவாக்கியிருக்கும் அனிமேஷன் சீரிஸ் `Jurassic World: Chaos Theory'. கேம்பிங் செல்லும் நண்பர்கள் குழு கண்டுபிடிக்கும் விஷயமும், அதனால் அவர்களுக்கு வரும் ஆபத்தும் தான் கதை.

2. The Blue Angels (English) Prime - May 23

The Blue Angels
The Blue AngelsPrime

Paul Crowder இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `The Blue Angels'. அனுபவம் வாய்ந்த மற்றும் புது கடற்படை விமானிகளும், அவர்களின் பயிற்சிகளும் தான் கதை.

3. Atlas (English) Netflix - May 24

Atlas
AtlasNetflix

Jennifer Lopez லீட் ரோலில் நடித்துள்ள படம் `Atlas’. செயற்கை நுண்ணறிவால் தயாரான போர்படை, மனித இனத்தை அழிப்பதை நோக்கமாக கொண்டு செயல்படுகிறது. அதை தடுக்க முடிந்ததா இல்லையா என்பதே கதை.

4. Wanted Man (English) Lionsgate Play - May 24

Wanted Man
Wanted Man Lionsgate Play

Dolph Lundgren இயக்கத்தில் உருவான படம் `Wanted Man'. வழக்கு ஒன்றில் சாட்சியான பெண்ணை, பாதுகாப்பாக அழைத்து வரவேண்டும். இந்தப் பொறுப்பை ஏற்கும் காவலரின் பயணமே படம்.

5. Vallavan Vaguthathada (Tamil) Aha - May 24

Vallavan Vaguthathada
Vallavan VaguthathadaAha

விநாயக் துரை இயக்கிய படம் `வல்லவன் வகுத்ததடா’. பணம் இல்லாததால் வாழ்க்கையில் பாதிக்கப்பட்ட ஐந்து நபர்களை சுற்றி நகரும் கதை.

6. Prasanna Vadanam (Telugu) Aha - May 24

Prasanna Vadanam
Prasanna VadanamAha

அர்ஜூன் இயக்கத்தில் சுஹாஸ் நடித்த படம் `Prasanna Vadanam'. மனித முகங்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியாது என்ற வினோதமான Face Blindness பிரச்சனை உள்ள ஹீரோ, ஒரு கொலை வழக்கின் சாட்சியாகிறார். இதன் பின் நடக்கும் திருப்பங்களே படம்.

7. Aarambham (Telugu) Etv WIN - May 24

Aarambham
AarambhamEtv WIN

அஜய் நாக் இயக்கத்தில் உருவான படம் `Aarambham'. சிறையில் இருக்கும் மரணதண்டனைக் கைதி, தூக்கிலிடும் முந்தைய நாள் தப்பிவிடுகிறான். ஆனால் எப்படி தப்பித்தான் என்ற மர்மம் யாருக்கும் புரியவில்லை. அதை விசாரிக்கும் இரண்டு டிடெக்டிவ்கள் மர்மத்தை தீர்த்தார்களா? கைதி எங்கே போனார்? என்பதே கதை.

8. Jai Ganesh (Malayalam) manoramaMAX - May 24

Jai Ganesh
Jai GaneshmanoramaMAX

Ranjith Sankar இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடித்த படம் `Jai Ganesh'. வீல் சேரிலேயே வாழ்க்கையை கழிக்கும் கணேஷ், தன் மீது காண்பிக்கப்படும் கருணையால் மிகுந்த சோர்வுக்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளாகிறார். அவர் எப்படி மீள்கிறார் என்பதே கதை.

9. Saamaniyan (Tamil) - May 23

Saamaniyan
Saamaniyan

ராமராஜன் கம்பேக் கொடுக்கும் படம் `சாமானியன்’. வயதான கிராமத்துக்காரர் ஒரு நோக்கத்துக்காக போராடுகிறார். அது என்ன என்பதே கதை.

10. Turbo (Malayalam) - May 23

Turbo
Turbo

புலிமுருகன் புகழ் வைசாக் இயக்கத்தில் மம்மூட்டி நடித்திருக்கும் படம் `Turbo’. டர்போ ஜோஷ் என்பவர் எதிர்பாராத விதமாக வெற்றிவேல் என்ற கேங்ஸ்டருடன் மோதும் சூழல் உருவாகிறது. அதன் பின் நடக்கும் ஆக்‌ஷனே படம்.

11. Furiosa: A Mad Max Saga (English) - May 23

Furiosa: A Mad Max Saga
Furiosa: A Mad Max Saga

George Miller இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Furiosa: A Mad Max Saga'. மேட் மேக்ஸ் பட வரிசையில் ஐந்தாவது படம், Mad Max: Fury Road படத்தின் ஸ்பின் ஆஃப் ஆகவும், ப்ரீக்குவலாகவும் உருவாகியிருக்கிறது. ஃபியூரியோசா என்ற போராளியைப் பற்றிய கதை தான் படம்.

12. PT Sir (Tamil) - May 24

PT Sir
PT Sir

ஆதி நடித்திருக்கும் படம் `PT சார்’. இசையமைப்பாளராக ஆதிக்கு 25வது படம். ஒரு பிடி டீச்சர், மாணவி ஒருவருக்கு நடக்கும் பாலியல் சீண்டலுக்கு எதிராக போர் கொடி பிடிக்கிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதே கதை

13. Pagalariyaan (Tamil) - May 24

Pagalariyaan
Pagalariyaan

வெற்றி ஹீரோவாக நடித்திருக்கும் படம் `பகலரியான்’. ஒரு டாக்ஸி டிரைவருக்கும் - கேங்க்ஸ்டருக்கும் இடையேயான மோதலே படம்.

14. Konjam Pesinaal Yenna (Tamil) - May 24

Konjam Pesinaal Yenna
Konjam Pesinaal Yenna

கிரி இயக்கத்தில் வினோத் கிஷன், கீர்த்தி பாண்டியன் நடித்திருக்கும் படம் `கொஞ்சம் பேசினால் என்ன’. அஜய் - சஞ்சனா இருவரின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதே கதை.

15. Thalavan (Malayalam) - May 24

Thalavan
Thalavan

ஜிஸ் ஜாய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `Thalavan’. காவல் நிலையத்தில் உள்ள படி நிலைகள் எவ்வாறு இயங்கிறது என்பதை சொல்லும் படம்.

16. The Judgement (Kannada) - May 24

The Judgement
The Judgement

ரவிச்சந்திரன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் `The Judgement’. ஒரு வெற்றிகரமான வக்கீலின், அறம் சார்ந்த தடுமாற்றங்களே படம். தான் செய்த தவறுகளை சரி செய்ய நினைக்கும் போது அவர் வாழ்க்கையில் நடப்பவை என்ன என்பதே படம்.

17. Bhaiyya Ji (Hindi) - May 24

Bhaiyya Ji
Bhaiyya Ji

மனோஜ் பாஜ்பாய் நடித்திருக்கும் 100வது படம் `Bhaiyya Ji’. தன்னுடைய குடும்பத்தில் நிகழ்ந்த இழப்புக்கு பழி வாங்க புறப்படும் ஒருவனின் கதை.

18. Love Me (Telugu) - May 25

Love Me
Love Me

அருண் பீமவரபு இயக்கத்தில் உருவான படம் `Love Me'. செய்யாதே என சொல்லும் விஷயத்தை செய்து காட்டுவேன் என நினைக்கும் இளைஞர், பேய் இருக்கிறது என சொல்லப்படும் பங்களாவுக்குள் செல்கிறார். அதன் பின் நடப்பவையே கதை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com